ஜிம்மில் இருந்த பாடி பில்டர்.. திடீர்ன்னு சுருண்டு விழுந்து உயிரிழந்த துயரம்.. போலீசார் விசாரணையில் காத்திருந்த கடும் அதிர்ச்சி
முகப்பு > செய்திகள் > தமிழகம்பாடி பில்டர் ஒருவர், தன்னுடைய ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது நடந்த சம்பவம் ஒன்று, பலரையும் அதிர்ச்சிக்குள் ஆக்கி உள்ளது.

Also Read | "பொது இடங்களில் மாஸ்க் போடலைன்னா அபராதம்".. சென்னை மாநகராட்சி அதிரடி..!
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். 42 வயதாகும் இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆணழகன் போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளார்.
பாடி பில்டரான ஜெயக்குமார், நிறைய இடங்களில் நடைபெறும் ஆணழகன் போட்டியில் பங்கெடுத்தும் வந்துள்ளார்.
மயங்கி விழுந்த பாடி பில்டர்
மேலும், நாகர்கோவில் பகுதியில் ரோஹித் என்ற பெயரில் ஜிம் ஒன்றையும் அவர் நடத்தி வந்துள்ளார். இதனிடையே, வழக்கம் போல தனது உடற்பயிற்சி கூடத்துக்கு சென்ற மாஸ்டர் ஜெயக்குமார், அங்கு உடற்பயிற்சி செய்து கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த சமயத்தில், உடற்பயிற்சி கூடத்தில் வேறு சில இளைஞர்களும் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அந்த சமயத்தில் தான், திடீரென யாரும் எதிர்பாராத வகையில் ஜெயக்குமார் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஜெயக்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்
தொடர்ந்து, கணவரின் மறைவு தொடர்பாக ஜெயக்குமாரின் மனைவி, போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார். இதன் பின்னர், ஜெயக்குமார் மரணம் தொடர்பாக போலீசார் விசாரித்த போது, ஏராளமான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. பாடி பில்டரான ஜெயக்குமார், உடலை கட்டுக் கோப்பாக வைத்திருந்த நிலையில், திடீரென அவருக்கு மது பழக்கமும் தொடங்கி உள்ளது.
நாளாக நாளாக மது பழக்கத்திற்கு முழுவதும் ஜெயக்குமார் அடிமை ஆனதால், அவருக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டும் வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு, வீட்டுக்கு ஜெயக்குமார் சென்றதாக கூறப்படுகிறது. இதனால், மீண்டும் கணவன் மனைவி இடையே தகராறு எழ, இனிமேல் குடிக்கக் கூடாது என கணவரை அவர் கண்டிக்கவும் செய்துள்ளார்.
மனவேதனையில் ஜெயக்குமார்
தொடர்ந்து, ஜிம்மில் மயங்கி விழுந்த தினத்தன்றும் மது குடித்து விட்டு தான் ஜெயக்குமார் வந்துள்ளார். அப்படி அவர் குடித்த மதுவில் விஷம் கலந்திருந்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே போல, ஆணழகன் போட்டிகள் வரை வென்றும், மது பழக்கத்தை கைவிட முடியாமல் வேதனையில் ஜெயக்குமார் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பாடி பில்டரின் மறைவு, அப்பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Also Read | "அவரை லவ் பண்றேன்..அவரைத்தான் கல்யாணம் செஞ்சுப்பேன்".. பெற்றோரின் சம்மதப்படி காதலனை கரம்பிடித்த இளைஞர்..!

மற்ற செய்திகள்
