'இது என் அன்பு மகனுக்காக நான் கொடுக்க போற பரிசு...' 'இத அவன் வாழ்க்கையில மறக்கவே கூடாது, அப்படி ஒண்ணா இருக்கும்...' - 2 வயசு மகனுக்கு அப்பா அளித்துள்ள சர்ப்ரைஸ்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்தவர் விஜய்பாய் கதிரியா தொழிலதிபரான இவர், 2 மாதமே ஆன தனது மகனிற்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அளவிற்கு பரிசு ஒன்றை அளிக்க விரும்பியுள்ளார்.
அந்த முயற்சியில், அமெரிக்காவில் உள்ள நியூயார்கில் அமைந்துள்ள சர்வதேச சந்திர மண்டல பதிவகத்திடம் அனுமதி கோரி, இமெயில் ஒன்றை அனுப்பியுள்ளார். மேலும், மகனுக்காக சந்திரனில் நிலம் வாங்குவதற்குத் தேவையான ஆதாரங்களையும் சமர்ப்பணம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, விஜய்பாய் கதிரியாவின் மகனின் பெயரில் சான்றிதழ் ஒன்று அனுப்பப்பட்டது. அந்த சான்றிதழைப் பெறுவதன் மூலம், விஜய்பாய் கதிரியா தன் மகனின் பெயரில் நிலவில் நிலம் வாங்கியதாகக் கருதப்படும். அதன் மதிப்பு 750 அமெரிக்கா டாலர் என்று கூறப்படுகிறது.
'Outer Space Treaty' என்ற விண்வெளி ஒப்பந்தத்த விதியின் படி,நிலவில் இருக்கும் நிலத்தை ஒருவர் சொந்தம் கொண்டாட முடியாது. நிலவில் நிலம் வாங்க விரும்புவர்களுக்கு, சான்றிதழ்கள் (certificate) மட்டுமே வழங்கப்படும். அந்த சான்றிதழ் பெறுவதையே மிகவும் மதிக்கத்தக்க பரிசாக வாங்குகிற மனிதர்கள் கருதுகின்றனர்.
இதேபோன்று மறைந்த சுஷாந்த் சிங்க் ராஜ்புட், இறப்பதற்கு சில ஆண்டுகள் முன்பு நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். அதே போல, நடிகர் ஷாருக்கான் மீது அதீத அன்பு உடைய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ரசிகர்கள் இருவர், அவரது 52 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது பெயரில் நிலவில் சிறய இடம் ஒன்றை வாங்கி அவருக்குப் பரிசளித்தனர்.
இதேபோன்று சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் மனைவிக்காக கணவன் ஒருவர் சந்திரனில் ஐந்து ஏக்கர் நிலம் வாங்கியிருந்தார். பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் தொடர்ந்து இவ்வாறு சந்திரனில் நிலம் வாங்கி வருகின்றனர்.