24 மணிநேரத்துல அடுத்தடுத்து 21 முறை ஏற்பட்ட நிலநடுக்கம்..கடும் அச்சத்தில் அந்தமான் மக்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அந்தமான் கடற் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 21 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் கடும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.

Also Read | "அவரை லவ் பண்றேன்..அவரைத்தான் கல்யாணம் செஞ்சுப்பேன்".. பெற்றோரின் சம்மதப்படி காதலனை கரம்பிடித்த இளைஞர்..!
அந்தமான் கடல் பகுதியில் இன்று காலை 5.57 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்திருக்கிறது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகி உள்ளது. நேற்று மதியம் இரண்டு மணிமுதல் தற்போது வரையில் அந்தமான் கடல் பகுதியில் 21 முறை நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அங்கு வாழும் மக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.
தொடர்ச்சியாக 4 நிலநடுக்கங்கள்
நேற்று அந்தமான் பகுதியில் தொடர்ச்சியாக 4 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்திருந்தது. அதனை தொடர்ந்து தற்போது வரையில் மொத்தம் 21 முறை நில அதிர்வு ஏற்பட்டிருப்பதாகவும் இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 4 - 5 ஆக பதிவாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதல் நிலநடுக்கம் திங்கட்கிழமை மாலை 5.18 மணிக்கு ஏற்பட்டதாகவும் இது ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவான நிலநடுக்கம் அந்தமான் தலைநகரம் போர்ட் பிளேயரில் இருந்து 215 கிலோமீட்டர் தூரத்தில் ஏற்பட்டிருக்கிறது.
கடலுக்கடியே
அதுபோல, போர்ட் பிளேயரில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு அடியே 10 கிலோமீட்டர் ஆழத்தில் 4.6,4.4,4.7 ஆகிய அளவுகளில் நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. இருப்பினும் கடலுக்கடியே இவை நிகழ்ந்திருப்பதால் எச்சரிக்கை விடுக்கப்படாமல் உள்ளது. ஏற்கனவே ஜூலை 1 முதல் 4 ஆம் தேதி வரையில் அந்தமான் பகுதிகளில் மட்டும் 9 முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் நேற்று மதியம் துவங்கி தற்போது வரையில் 21 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். கடந்த மாதத்தில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 1000 -ற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்த நிலையில், அந்தமான் பகுதியில் அடுத்தடுத்து 21 முறை நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | "பொது இடங்களில் மாஸ்க் போடலைன்னா அபராதம்".. சென்னை மாநகராட்சி அதிரடி..!

மற்ற செய்திகள்
