இப்படி ‘தோனி தோனினு’.. ‘கிண்டல்’ பண்றது மரியாதை இல்ல.. வேண்டுகோள் விடுத்த ‘விராட் கோலி’..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Dec 05, 2019 06:27 PM

ரிஷப் பந்த் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை தவறவிட்டால் மைதானத்தில் தோனி தோனி எனக் குரல் எழுப்பி கிண்டல் செய்ய வேண்டாமென விராட் கோலி கேட்டுக்கொண்டுள்ளார்.

Disrespectful To Chant Dhonis Name Kohli Defends Rishabh Pant

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், செய்தியாளர்களை சந்தித்த விராட் கோலி போட்டி குறித்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அப்போது ரிஷப் பந்தின் ஆட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த கோலி அவருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

ரிஷப் பந்த் குறித்துப் பேசிய கோலி, “ரிஷப் பந்த் அவருடைய திறமையை நிரூபிக்கத் தேவையான இருப்பை வழங்குவது அனைவருடைய பொறுப்பு என நினைக்கிறேன். போட்டியின்போது அவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை அவர் தவறவிட்டால் மைதானத்தில் தோனி தோனி என குரல் எழுப்பி அந்த இளம் வீரரை கிண்டல் செய்ய வேண்டாம். இது மரியாதை இல்லை. எந்த வீரருக்கும் இந்த நிலை வரக்கூடாது. உங்கள் நாட்டுக்காக விளையாடும்போது நிச்சயமாக உங்கள் ஆதரவு கிடைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Tags : #VIRATKOHLI #MSDHONI #RISHABHPANT #TEAMINDIA