‘இனி உங்க அனுமதி இல்லாம யாரும் இத பண்ண முடியாது’.. வாட்ஸ் அப்-க்கு வந்த அசத்தல் அப்டேட்..!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Selvakumar | Oct 22, 2019 08:22 PM

வாட்ஸ் அப் பயனர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றினை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

WhatsApp\'s latest update, block contacts from adding you to groups

வாட்ஸ் அப்பில் க்ரூப் சாட் (Group chat) செய்யும் பயனர்களுக்கான புதிய அப்டேட் ஒன்று வந்துள்ளது. இதன்மூலம் தேவையில்லாமல் பல குரூப்களில் இணைவதை தவிர்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. க்ரூப் சாட்களுக்காக ‘My Contacts Except’ என்னும் அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. இதில் Everyone, My Contacts, Nobody என்ற மூன்று அம்சங்களில் ஏதேனும் ஒன்றினை பயனர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

யார் வேண்டுமானாலும் உங்களை வாட்ஸ் அப் க்ரூப்பில் இணைக்கலாம் என்றால் ‘Everyone' என்ற ஆப்ஷனை தேர்வு செய்யலாம். உங்களது காண்டாக்ட்ஸ் லிஸ்ட்டில் உள்ளவர்கள் மட்டும் என்றால் ‘My Contacts’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இதில் புதிதாக ‘Nobody’ என்னும் ஆப்ஷன் இணைக்கப்பட்டுள்ளது. இதனை தேர்ந்தெடுத்தால் உங்களது அனுமதி இல்லாமல் நேரடியாக யாரும் வாட்ஸ் அப் க்ரூப்பில் இணைக்க முடியாது. உங்களை வாட்ஸ் அப் க்ரூப்பில் இணைக்க மற்ற பயனர்கள் 'invite' கொடுக்கலாம். ஆனால் 3 நாட்களில் இந்த அழைப்பு காலவதியாகிவிடும். மேலும் பீட்டா பயனாளர்களுக்கு இந்த அப்டேட் கொடுக்கப்படவில்லை. விரைவில் இவர்களுக்கும் அப்டேட் செயல்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.

Tags : #WHATSAPPUPDATE #WHATSAPP #WHATSAPPGROUPLINK #WHATSAPPGROUPS