அம்மாவ விட பெரிய சக்தி இல்ல.. நெகிழ வைத்த மனிதாபிமானம்.. KGF பட பாணியில் ஒரு ரியல் சம்பவம்.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Nov 07, 2022 09:52 PM

தனது கைக்குழந்தையுடன் சாலையை கடக்க பெண் ஒருவர் முயற்சி செய்யும் நிலையில், அங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர் போல இருக்கும் ஒருவர் ஓடிச் சென்று உதவி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவருடைய இந்த செயல் பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.

Demented man clears traffic for women and kid cross road

பெருகிவரும் நகரமயமாக்கல் காரணமாக சமீப ஆண்டுகளில் போக்குவரத்து நெருக்கடியும் பெரிய அளவில் உருவாக்கி பொதுமக்களை வாட்டி வருகிறது. பாதசாரிகள் கவனத்துடன் பாதையை கடக்கும் வரைகூட சில வாகனஓட்டிகள் பொறுமை காட்டுவது இல்லை. இதனாலேயே பெரும் விபத்துகள் ஏற்படுகின்றன. அந்த வகையில், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் பெண் ஒருவர் கையில் குழந்தையுடன் சாலையின் ஒரு பக்கம் நிற்கிறார்.

Demented man clears traffic for women and kid cross road

அப்போது, அங்கு நின்றிருந்த ஒருவர் ஓடிச் சென்று அவரை சிறிது நேரம் காத்திருக்க சொல்கிறார். அதைத் தொடர்ந்து, சாலையில் செல்லும் வாகனங்களை கை காட்டி நிறுத்துமாறு சைகை செய்யும் இந்த நபர், கைக்குழந்தையுடன் நின்றிருந்த பெண்மணியை பத்திரமாக சாலையின் அடுத்த பக்கத்திற்கு அழைத்துச் செல்கிறார்.

Demented man clears traffic for women and kid cross road

சாலையில் பல வாகனங்கள் சீறிப்பாய்ந்து கொண்டு சென்றாலும், யாருமே கையில் குழந்தையுடன் காத்திருந்த பெண்ணுக்கு உதவி செய்ய முன்வரவில்லை. ஆனால், அழுக்கு படிந்து கிழிசல்களுடன் உள்ள உடையை அணிந்திருந்த அந்த நபர் ஓடிச்சென்று பெண்ணுக்கு உதவி இருக்கிறார். உண்மையில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவரா? அல்லது ஆதரவற்றை நிலையில் வாடுபவரா என்பது தெரியவில்லை. வேகமெடுத்து சென்றுகொண்டிருந்த வாகனங்களை நிறுத்தி ஒரு அரண் போல அந்த பெண்மணியை சாலையை கடக்க வைக்கிறார் இவர். இதனை அங்கிருக்கும் சிலர் வேடிக்கை பார்க்கின்றனர்.

Demented man clears traffic for women and kid cross road

இந்த வீடியோ எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்பது தெரியாத நிலையில் இணையத்தில் பலருடைய கவனத்தை ஈர்த்திருக்கிறது. மேலும், நெட்டிசன்கள் இந்த வீடியோவில்,"மனிதாபிமானத்துடன் அவர் நடந்து கொள்கிறார்" என்றும், "நல்ல ஆன்மா அவருடையது" என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

Tags : #TRAFFIC #WOMAN #ROAD #CROSSING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Demented man clears traffic for women and kid cross road | India News.