"4 மணி நேரமா ரிப்ளை வரல".. சந்தேகமடைந்த தோழி செஞ்ச வினோத காரியம்.. இதுவல்லவோ FRIENDSHIP..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Oct 31, 2022 10:54 AM

சீனாவில் 4 மணி நேரமாக மெசேஜிற்கு ரிப்ளை செய்யாத தோழியை கண்காணிக்க பெண் ஒருவர் விசித்திர நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார். காரணத்தை கேட்டு நெட்டிசன்கள் நெகிழ்ந்து போயுள்ளனர்.

A woman sends a drone to check on friend after she did not reply

Also Read | 140 பேரை பலி கொண்ட குஜராத் கேபிள் பாலம்.. விபத்துக்கு சில மணி நேரம் முன்பே கணித்த நபர்.. பகீர் காரணம்!

நண்பர்கள் இடையேயான அரட்டை எப்போதும் ஓய்வதில்லை. இணையம் வளர்ந்துவிட்ட பிறகு, சமூக வலை தளங்கள் நண்பர்களிடையே பெரும் இணைப்பு பாலமாக செயல்பட்டு வருகிறது. சில நேரங்களில் நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்பி அவர்கள் பதில் அளிக்கவில்லை என்றால், போன் செய்து வசைபாடவும் சில நண்பர்கள் தவறுவதில்லை. ஆனால், சீனாவை சேர்ந்த ஒரு பெண், அதெற்கெல்லாம் ஒரு படி மேலே போய், டிரோனை அனுப்பி தனது தோழியை கண்காணித்திருக்கிறார். ஆனால், இதற்கு பின்னால் ஒரு சோக பின்னணியும் இருக்கிறது.

A woman sends a drone to check on friend after she did not reply

சீனாவை சேர்ந்தவர் வான் என்ற பெண்மணி. இவருக்கு சமீபத்தில் இதய பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி காலை 7 மணிக்கு தனது தோழிக்கு தனக்கு உடல்நிலை சரியில்லை என மெசேஜ் அனுப்பியுள்ளார். இதனை அறிந்த வானின் தோழி, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ளும்படி அறிவுரை சொல்லியிருக்கிறார்.

அதன்பிறகு, என்ன ஆயிற்று என்பதை அறிய அந்த பெண் வான்-க்கு மெசேஜ் அனுப்ப எந்தவித ரிப்ளையும் வரவில்லை. இதனால் அச்சமடைந்த பெண் தனது தோழியான வானிற்கு போன் செய்திருக்கிறார். அவர் போனையும் எடுக்காததால் படபடத்துப்போன அந்த பெண், தன்னிடம் இருந்த டிரோனை வானின் வீட்டுக்கு அனுப்பியுள்ளார். அப்போது, ஜன்னல் வழியே டிரோன் பறப்பதை பார்த்து ஆச்சர்யமடைந்திருக்கிறார் வான்.

A woman sends a drone to check on friend after she did not reply

பின்னர்தான் தனது உடல்நிலை குறித்து தகவல் தெரியாததால் தனது தோழி அனுப்பிய டிரோன் அது என்பது தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து பேசிய வான்,"நாங்கள் 5 ஆண்டுகளாக நட்புறவில் இருந்துவருகிறோம். பல நேரங்களில் எனக்கு அவர்கள் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். சுவையான உணவுகளை கொடுத்தும் தங்களது அன்பை அவர்கள் வெளிப்படுத்தியிருக்கின்றனர். இந்நிலையில், எனக்கு உடல்நிலை சரியில்லை என்பதற்காக டிரோனை அனுப்பிய அவர்களது செயல் என்னை நெகிழ வைத்துவிட்டது" என்றார்.

இந்நிலையில், "இதுவல்லவோ friendship" என்றும், "உங்களுக்கு சிறந்த நண்பர் கிடைத்திருக்கிறார்" என்றும் நெட்டிசன்கள் வானின் சமூக வலை தல பதிவில் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Also Read | தப்பு பண்ணது அவர் இல்லையா??.. 38 வருஷம் சிறை.. இத்தனை நாள் கழிச்சு DNA டெஸ்ட்டில் தெரிய வந்த உண்மை

Tags : #WOMAN #DRONE #FRIEND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. A woman sends a drone to check on friend after she did not reply | World News.