'டாய்லெட்டில் ஃபிளெஷ் செய்ய போன இளம்பெண்'... 'ஒரு நொடி அப்படியே அதிர்ந்து நிற்க வைத்த காட்சி' ... பகீர் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் மிரந்தா ஸ்டீவர்ட். இவர் தனது அறையிலுள்ள டாய்லெட்டிற்கு சென்று விட்டு ஃபிளெஷ் செய்வதற்காகத் தண்ணீர் பொத்தானை அமுக்க முயன்றுள்ளார். அப்போது தண்ணீர் நிரம்பியிருக்கும் ஃபிளஷ் பெட்டியில் ஏதோ ஒன்று நெளிகிறதே என உற்றுப் பார்த்துள்ளார். அப்போது அது பாம்பு எனத் தெரியவந்தது. இதனால் ஒரு நொடி அப்படியே அதிர்ந்து நின்றார். பின்னர் சுதாரித்துக்கொண்டு தனது நண்பர் ஒருவருக்கும், அடுக்குமாடிக் குடியிருப்பின் காவலாளிக்கும் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து ஸ்டீவர்டின் நண்பர் டாய்லெட்டுக்குச் சென்று பாம்பு இருப்பதை உறுதி செய்தார். பின்னர் அந்த பாம்பைப் பிடிக்க முயற்சி செய்த ஸ்டீவர்டின் நண்பர், 40 நிமிடங்கள் போராட்டத்திற்குப் பிறகு லாவகமாக அதன் வாலைப் பிடித்து வெளியே இழுத்தார். வெளியே எடுத்த பிறகுதான் அது 10 அடி நீளமுள்ள பாம்பு என்பது தெரியவந்தது. இதனை வீடியோ எடுத்த ஸ்டீவர்ட், தனது இன்ஸ்டாகிராமிலும், சமூகவலைத்தளங்களிலும் பதிவிட்டார். டாய்லெட்டுக்குள் பாம்பு புகுந்த சம்பவம் ஸ்டீவர்டியை கலங்கடித்து விட்டது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு தினமும் வீடு முழுவதும் ஒரு சோதனையிட்ட பிறகுதான் ஸ்டீவர்ட் தூங்கச் செல்கிறார். சமீபகாலமாக அமெரிக்காவில் பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் மனிதர்கள் வசிக்கும் பகுதிக்குள் செல்வது அதிகரித்து வருகிறது. இதற்குச் சூழ்நிலை மாற்றங்கள் அதிகரித்து வருவது முக்கிய காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளார்கள்.