'5 வயசா இருக்கும்போது தூக்கத்துல இருந்து முழிச்சேன்'... 'இப்போ 40 வருஷம் ஆச்சு'... பெண் சொன்னதை கேட்டு மிரண்டுபோன மருத்துவர்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் பெண் ஒருவர் மருத்துவரிடம் சொன்ன விஷயம் சீன மருத்துவ உலகத்தையே மிரளச் செய்துள்ளது.

சீனாவின் கிழக்கு மாகாணமான ஹெனானைச் சேர்ந்தவர் லி ஜானிங். இவருக்கு ஒரு விசித்திர வியாதி இருப்பதைப் பார்த்த மருத்துவர்கள் மிரண்டு போயுள்ளார்கள். அதாவது லி ஜானிங் தனது 5 வயதில் ஒரு முறை தூக்கத்திலிருந்து விழித்துள்ளார். ஆனால் அதன் பிறகு அவர் தூங்கவே இல்லை என்பது தான் பலருக்கும் ஆச்சரியம்.
பல ஆண்டுகளுக்கு முன்னர், லி ஜானிங்யின் இந்த கூற்றைச் சோதிக்கப் பலர் முயன்று, கடைசியில் அவர்கள் தூங்கிப் போனார்கள். ஆனால் லி ஜானிங் மட்டும் தூக்கமின்றி, புத்துணர்வுடன் காணப்பட்டுள்ளார். லி ஜானிங்யின் கணவரும் தமது மனைவி தூங்குவதைத் தாம் இதுவரை பார்த்ததில்லை என உறுதி செய்துள்ளார். ஊரே தூக்கத்தில் இருக்கும் போது லி ஜானிங், வீட்டைச் சுத்தம் செய்வது உள்ளிட்ட வேலைகளில் மும்முரமாக இருப்பார் என அவரது கணவர் தெரிவித்துள்ளார்.
மனைவியின் இந்த தூங்காத நிலையால் கவலை கொண்ட அவரது கணவர், தூக்க மாத்திரைகளும் வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால் அதனாலும் பலனேதும் இல்லை என்றே தெரிய வந்துள்ளது. இதற்கிடையே மருத்துவர்கள் குழு முன்னெடுத்த தீவிர பரிசோதனையில், லி ஜானிங் தூங்குகிறார், ஆனால் அது விசித்திரமான முறையில் நடக்கிறது எனக் கண்டறிந்தனர்.
லி ஜானிங் தனது கணவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது, அவரது கண் இமைகள் கவிழ்வதை மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதுவே அவர் தூக்கத்தில் இருப்பதை உணர்த்துவதாகவும், ஆனால் அப்போதும் அவர் பேசிக் கொண்டிருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், ஒரு நாளுக்கு 10 நிமிடங்களுக்கு மேல் அவரது கண்கள் மூடவில்லை என்பதையும் மருத்துவர்கள் சோதனையில் கண்டறிந்துள்ளனர்.

மற்ற செய்திகள்
