'இது பச்ச துரோகம்!'.. வல்லரசு நாடாக உருவெடுக்க... சீனா செய்த ஈவு இரக்கமற்ற கொடும்பாவம்!.. பதறவைக்கும் ரிப்போர்ட்!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனா ஒரு வல்லாதிக்க நாடாக உருவெடுப்பதற்கு மிகப்பெரிய விலையை கொடுத்துள்ள பின்னணி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் நூற்றுக்கணக்கான நாடுகள் இருந்தாலும், உலகையே ஆட்டிப்படைக்கும் வல்லாதிக்க நாடுகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அறிவியல், அரசியல், பொருளாதாரம் என அனைத்திலும் முன்னிலையில் இருக்கும் அமெரிக்காவுக்கு, சமீப காலங்களில் சீனா சிம்ம சொப்பனமாக உருவெடுத்துள்ளது. தெற்காசிய நாடுகளில் மிகவும் சக்தி வாய்ந்த வல்லரசாக சீனா நிலைகொள்வதற்கு, அதன் அணு ஆயுதங்களும் ஒரு காரணமாகும்.
கடந்த 1964 முதல் 1996ம் ஆண்டு வரை சீனா 45 அணுகுண்டுகளை வெற்றிகரமாகப் பரிசோதனை செய்துள்ளது. அதன் விளைவாக 1.94 லட்சம் பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இதனால் ஏற்பட்ட கதிர்வீச்சின் விளைவாக, சுமார் 12 லட்சம் மக்கள் ரத்தப் புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக தி நேஷனல் இன்ட்ரஸ்ட் என்ற ஆய்வுப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, அதில் வெவ்வேறு இனப் பின்னணியைச் சேர்ந்த சுமார் இருபது மில்லியன் மக்கள் வசிக்கும் சின்ஜியாங் பகுதியில் கதிர்வீச்சு அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அணு ஆயதங்கள் மனித இனத்தின் அழிவுக்கு வித்திடும் அபாயம் கொண்டவையாக அறிவியலாளர்கள் விவாதித்து வரும் நிலையில், அணுகுண்டு சோதனையில் லட்சக்கணக்கான உயிர்களை சீனா பலி கொடுத்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
