'போலீஸ் இருக்குன்னு கொஞ்சம் கூட பயம் இல்ல'... 'நைசா இளம்பெண் செய்த கேவலமான செயல்'...கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சிகள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Sep 17, 2021 09:51 AM

போலீசார் இருக்கும்போதே இந்த செயலை இளம்பெண் எப்படிச் செய்தார் என்பது தான் நெட்டிசன்களின் கேள்வியாக உள்ளது.

The couple tries to steal a gold chain from a man’s neck

அமெரிக்காவின் Las Vegas நகர போலீசார் குற்றச் செயலில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரைக் கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். போலீசாரின் கைகளில் சிக்கிய அந்த இளைஞரைக் குப்புறப் படுக்க வைத்து, அவரது கால்களை மடக்கிப் பிடித்துக் கொண்டு, அந்த இளைஞரின் கைகளில் கை விலங்கினை மாட்ட போலீசார் ஒருவர் முயன்று கொண்டிருந்தார்.

The couple tries to steal a gold chain from a man’s neck

அப்போது என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக அந்த பகுதியில் பொதுமக்கள் பலரும் திரண்டு நின்று கொண்டிருந்தார்கள். அந்த நேரம் பார்த்து கூட்டத்தில் நின்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவர், மெதுவாக போலீசாரின் முதுகுக்குப் பின்னால் வந்து, போலீசார் பிடித்து வைத்திருந்த இளைஞரின் கழுத்திலிருந்த சங்கிலியைக் கழற்ற முற்பட்டார்.

ஆனால் போலீசார் அந்த இளைஞரின் கையில் விலங்கு மாட்டுவதில் மும்முரமாக இருந்ததால் அந்த இளம்பெண்ணைக் கவனிக்கவில்லை. இதற்கிடையே அந்த பெண் எவ்வளவோ முயன்றும் அந்த இளைஞரின் கழுத்திலிருந்த சங்கிலியைக் கழற்ற முடியவில்லை. உடனே இளம்பெண்ணுடன் வந்த இளைஞர் வந்து, மீண்டும் அந்த இளைஞரின் கழுத்திலிருந்த சங்கிலியைக் கழற்ற முற்பட்டார். ஆனால் அவராலும் முடியாமல் போக, அந்த சங்கிலியை வேகமாக இழுத்தார்.

The couple tries to steal a gold chain from a man’s neck

இதனால் போலீசாரிடம் மாட்டிக்கொண்ட இளைஞர் அசைவதைப் பார்த்த போலீசார், அவனை விடு எனச் சத்தமாகக் கத்தினார். இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கும் அவனை விடு எனச் சத்தம் போட அந்த இளைஞர் அந்த இடத்திலிருந்து  செல்லாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தார்.

சுத்தி கேமரா இருக்க, பலர் வீடியோ எடுக்க, அதுவும் போலீசார் இருக்கும்போதே அந்த இளைஞரும், இளம்பெண்ணும் எப்படி இதுபோன்ற செயலில் ஈடுபட்டார்கள் என்பது தான் நெட்டிசன்களின் கேள்வியாக உள்ளது.

Tags : #LAS VEGAS

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. The couple tries to steal a gold chain from a man’s neck | World News.