சீனா பெருசா 'பிளான்' பண்ணிட்டாங்க...! 'இந்தியாவுக்கு தான் சரியான ஆப்பு...' என்ன நடக்க போகுதோ...? - 'பேரிடியாய்' வெளிவந்துள்ள 'அதிர' வைக்கும் தகவல்...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் உபயோகித்து வந்த பக்ராம் விமானப்படை தளத்தை பெற்றுக்கொண்டு இந்தியாவிற்கு தொல்லை கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதலுக்கு பழித்தீர்க்க ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்த அமெரிக்க படைகள், கடந்த இருபது ஆண்டுகளாக தாலிபான்களுடன் நடத்திய போர் கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதியுடன் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்க படை வெளியேறிய பின்பு, தாலிபான்கள் அங்கு ஆட்சி அமைப்பது குறித்த தகவல்கள் இன்று வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்கா 20 ஆண்டுகளாக போர் நடத்தியபோது, பக்ராம் விமானப்படை தளம் முக்கிய பங்கு வகித்தது. மேலும், தாலிபான்களுக்கு எல்லா வகையிலும் ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தானும், சீனாவும், தாலிபான் அரசுக்கு உலக நாடுகளின் அங்கீகாரத்தை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்தியாவுக்கு ராணுவத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் சீனா, அடுத்த திட்டமாக அமெரிக்கா விட்டு சென்ற பக்ராம் விமானப்படை தளத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இருப்பதாக அமெரிக்காவின் முன்னாள் ஐநா தூதர் நிக்கி ஹாலே குண்டைத் தூக்கி போட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படையை திரும்ப பெறுவதற்கான அவசர முடிவுக்குப் பிறகு, தனது நட்பு நாடுகளின் நம்பிக்கையை அதிபர் ஜோ பைடன் இழந்துள்ளார். இதன் காரணமாக, அமெரிக்காவிற்கு மேலும் பல சவால்கள் காத்திருக்கின்றன. ரஷ்யாவையும், சீனாவையும் அமெரிக்கா தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் பக்ராம் விமானப் படை தளத்தை கைப்பற்ற சீனா தந்திரமாக இப்போதே வேலையை ஆரம்பித்துவிட்டது. பாகிஸ்தான் உதவியுடன் ஆப்கானிஸ்தானுக்குள் வந்து, இந்தியாவுக்கு எதிராக அசாத்திய வலிமையுடன் திகழ சீனா முயற்சிக்கிறது,’’ என்று தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
