'முட்டையை வச்சு ஆம்லெட் மட்டும் இல்ல'... 'கின்னஸ் ரெகார்ட்டும் பண்ணலாம்'... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்3 முட்டைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி கின்னஸ் சாதனை படைத்த இளைஞரின் வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது.

கோலாலம்பூரைச் சேர்ந்தவர் முகமது முக்பெல் என்ற இளைஞர். இவருக்கு ஏதாவது சாதனை பண்ண வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது. அதற்காக அவர் தேர்வு செய்தது தான் முட்டை. அதாவது 3 முட்டைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கிச் சரியாக நிற்க வைத்து கின்னஸ் சாதனை படைக்கத் திட்டமிட்டார். இதற்காக அவர் கின்னஸ் நிறுவனத்தை அணுகிய நிலையில், சாதனைக்காக நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.
அதில், ''இந்த சாதனை 5 வினாடிகளில் செய்து முடிக்கப்பட வேண்டும் என்றும், மூன்று முட்டைகளும் புதியனவாக இருத்தல் வேண்டும்'' உள்பட பல்வேறு நிபந்தனைகளை கின்னஸ் அமைப்பு விதித்து இருந்தது. இதை ஏற்றுக்கொண்ட அந்த இளைஞர், 3 முட்டைகளையும் செங்குத்தாக அடுக்கி வைத்து கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தார்.
தனது சாதனை குறித்துப் பேசிய அந்த இளைஞர், பொறுமை, பயிற்சி மற்றும் ஒருமுகத்தன்மை ஆகியவை இருந்தால் மட்டுமே இந்த சாதனையைப் படைக்க முடிந்தது. முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை என முகமது முக்பெல் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
