VIDEO: 'என்ன இது...! உள்ள ஏதோ நெளியுது...' 'வெஸ்டர்ன் டாய்லெட்டில் நுழைந்த பாம்பு...' 'தப்பிச்சோமோ பிழைச்சோமா-ன்னு எஸ்கேப் ஆகாம இளைஞர் பார்த்த வேலை' - வைரல் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > உலகம்பொதுவாகவே அமெரிக்கர்கள் எந்த ஒரு ஆபத்தையும் அல்லது சிரிப்பூட்டும் வகையில் நடக்கும் சம்பவங்களோ உடனே கேமிராவில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அதிக பார்வையளர்களை ஈர்த்து கொள்வர்.

அதுபோல தற்போது அமெரிக்கர் ஒருவர் தான் கழிவறை உபயோகிக்கும் போது, வெஸ்டர்ன் டாய்லெட் என்று கூறப்படும் கழிப்பிடத்தில் இருந்து ஏதோ ஒன்று நெளிவது போன்று இருந்துள்ளது. பின்னர் பார்த்தபோது அது சாரை பாம்பு ஒன்று வெளிவந்துள்ளது.
தப்பித்தோமா பிழைத்தோமா என்றில்லாமல் அந்த சாரை பாம்பை கோல்ஃப் குச்சி கொண்டு இளைஞர் ஒருவர் அதனை அகற்ற முற்படுகிறார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் பரவலாக அனைவராலும் பார்க்கப்பட்டு வருகிறது.
ட்விட்டர் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவை இதுவரை சுமார் ஒன்றரை பில்லியன் மக்கள் பார்த்ததாகவும், 11,000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் ரீட்வீட் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
I always thought this was an irrational fear of mine...apparently not. Friend out in west Texas found this. 😳😳😳 pic.twitter.com/jd23gbLkGF
— Payton Malone WWL-TV (@paytonmalonewx) August 16, 2020

மற்ற செய்திகள்
