நீ என் பொண்ணு இல்லம்மா.. அப்பாக்கே இப்போ தான் தெரிஞ்சிது.. 30 வருஷம் முன்னாடி மருத்துவமனையில் நடந்த ஒரு சம்பவம்.. தெரிய வந்த உண்மை
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்கா: அமெரிக்காவில் கருத்தரிப்பு மருத்துவமனை ஒரு தம்பதியினருக்கு கணவரின் விந்தணுவிற்கு பதிலாக வேறொருவரின் விந்தணுவை செலுத்தியது 30 வருடங்கள் கழித்து தெரியவந்துள்ளது.

செயற்கை கருத்தரிப்பு முறையில் பெண் குழந்தை:
அமெரிக்காவில் கிலீவ்லாண்ட் பகுதியில் வசிக்கும் ஜெனைன் - ஜாண் மைக் தம்பதியிருக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் இருந்துள்ளது. இதன் காரணமாக 1991-ம் ஆண்டு கருத்தரிப்பு மையம் ஒன்றில் சென்று சிகிச்சை பெற்று வந்தனர். அதற்கு அடுத்த ஆண்டே, ஜெனைன் - ஜாண் மைக் தம்பதியினருக்கு 1992-ம் ஆண்டு செயற்கை கருத்தரிப்பு முறையில் பெண் குழந்தை பிறந்தது. நீண்ட நாள் காத்திருந்து பெற்ற தங்கள் ஆசை மகளுக்கு ஜெஸ்ஸிகா என பெயர் வைத்து வளர்த்து வந்தனர்.
டிஎன்ஏ பரிசோதனை :
தற்போது 30 வயதாகும் ஜெஸ்ஸிகாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு ஜெஸ்ஸிகா தன் கணவருடன் ஐரோப்பாவுக்கு சுற்றுலா திட்டமிட்டுள்ளனர். அதற்காக ஜெஸ்ஸிகா மற்றும் அவருடைய கணவர் இருவருக்கும் டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டது.
குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி:
அப்போது தான் அந்த குடும்பத்திற்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ஜெஸ்ஸிகாவின் மரபணு பரிசோதனை முடிவில் அவருடைய தாயாரின் மரபணுவுடன் அவருடைய மரபணு ஒத்துப்போய் இருந்ததே தவிர அவருடைய தந்தையாரின் மரபணுவுடன் ஒத்துப்போகவில்லை.
30 ஆண்டுகள் கழித்து தெரிய வந்த உண்மை:
இதற்கு காரணம் சம்பந்தப்பட்ட மருத்துவமனை செயற்கை கருத்தரிப்பு மூலம் பிறந்த அந்த குழந்தை இன்னொரு நபருடைய விந்தணுவை செலுத்தியுள்ளது. இந்த உண்மை கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கழித்து ஜெனைன் - ஜாண் மைக் தம்பதியினருக்கு தெரியவந்துள்ளது. அதேபோல் ஜெனைன் - ஜாண் மைக் தம்பதியினர் செயற்கை கருத்தரிப்புக்கு சென்றிருந்த போது, வந்திருந்த இன்னொரு நபரின் மரபணுவுடன் ஜெஸ்ஸிகாவின் மரபணு ஒத்திருந்ததுள்ளது.
இதுக்குறித்து கூறிய ஜெனைன் - ஜாண் மைக் தம்பதியினர், 'நாங்கள் எங்களுக்கான வாரிசை பெற்றெடுக்க நினைத்தோம். ஆனால் நடந்தது வேறு. இதற்கு முழு காரணம் அந்த மருத்துவமனை நிர்வாகம் தான்' எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.
என மனைவி செம போதை.. ஃபுல் மப்புல சொன்ன விஷயம்.. உச்சக்கட்ட வெறியான கணவன்.. அதிர வைக்கும் வாக்குமூலம்

மற்ற செய்திகள்
