80 வயதில் தந்தைக்கு வந்த கல்யாண ஆசை.. கடுப்பான மகன் - சோகத்தில் முடிந்த விபரீத சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மறுமணத்திற்காக பதிவு செய்த 80 வயதான தந்தையை அவரது மகனே அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புனேவின் ராஜ்குருநகர் பகுதியில் பேக்கரி வைத்து நடத்திவருகிறார் சேகர். இவரது தந்தை சங்கர் (80). சேகர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்துவருகிறார். 10 ஆண்டுகளுக்கு முன்னர் சேகரின் தாய் மரணமடையவே, தந்தை சங்கரும் அதுமுதல் சேகர் வீட்டிலேயே வசித்துவருகிறார்.
கல்யாண ஆசை
வீட்டில் இருக்கும் சங்கர், செய்தித் தாள்களைப் படிப்பதிலும் மொபைல் போனை உபயோகிப்பதில் அளவுகடந்த ஆர்வம் காட்டியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த சேகரின் மனைவி, தனது மாமனாரின் செயல்களைக் கண்காணிக்கத் துவங்கியிருக்கிறார். அப்போதுதான், செய்தித் தாள்களில் வரும் மறுமணம் குறித்த தகவல்களை சங்கர் சேகரித்துவருவதும், போனில் ஆன்லைன் மூலமாக மறுமணத்திற்கு கட்டணம் செலுத்தி மணமகளைத் தேடிவருவதும் சேகரின் மனைவிக்குத் தெரியவந்திருக்கிறது.
கடுப்பான மகன்
இந்நிலையில் சங்கரின் செயல்பாடுகள் குறித்து தனது கணவர் சேகரிடத்தில் அவரது மனைவி கூறியிருக்கிறார். இதனால், கோபமடைந்த சேகர், கடந்த வியாழக்கிழமை அன்று மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, ஆன்லைனில் மறுமணத்திற்கு விண்ணப்பித்தது குறித்து சங்கரிடம் சேகர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
உலகின் பவர்ஃபுல் பாஸ்போர்ட்.. இது மட்டும் இருந்தா 192 நாடுகளுக்கு விசா இல்லாமலேயே போகலாம்..!
ஆரம்பத்தில் மறுத்த சங்கர், பின்னர் ஒப்புக்கொள்ளவே இருவருக்குள்ளும் கைகலப்பாகியிருக்கிறது. ஒருகட்டத்தில் ஆத்திரம் தாளாது சங்கரை சரமாரியாக சேகர் தாக்க, இதனால் சங்கர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்திருக்கிறார்.
போலீசில் சரண்
இதனையடுத்து காவல்நிலையத்திற்குச் சென்ற சேகர் தனது தந்தையை கொலை செய்துவிட்டதாகக் கூறி சரணடைந்திருக்கிறார். இந்நிலையில் காவல்துறை ஐபிசி 302-ன் கீழ் சேகரின் மீது வழக்குப்பதிவு கைது செய்துள்ளனர்.
காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் சேகர் அவருடைய 80 வயது தந்தையை கத்தியால் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி செய்து, அதன்பின்பு கல் கொண்டு பலமாக தலையில் அடித்து கொலை செய்தது மட்டுல்லாமல் சங்கரின் தலையை துண்டிக்க முயற்சி செய்துள்ளதும் தெரியவந்திருக்கிறது. மறுமணம் செய்ய பெண்தேடிய தந்தையை அவரது மகனே அடித்துக்கொன்றது புனே பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
