என் மனைவி கள்ளக்காதலனோடு.. பேசிகிட்டு இருக்குறதா தகவல் வந்துச்சு.. ஸ்பாட்டுக்கு போய் கணவன் நடத்திய அதிரடி ஆக்ஷன்
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவண்ணாமலை: மனைவி கள்ளக்காதலனோடு பேசுவதை கண்டவுடன் வெறியான கணவன் செய்த காரியம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என மனைவி செம போதை.. ஃபுல் மப்புல சொன்ன விஷயம்.. உச்சக்கட்ட வெறியான கணவன்.. அதிர வைக்கும் வாக்குமூலம்
கள்ளகாதலாக மாறிய நட்பு:
திருவண்ணாமலை மாவட்டம் அடுத்த வேடியப்பனூர் பகுதியில் இருக்கும் செல்வபுரம் கொல்லக்கொட்டாய் கிராமத்த்தில் வசிப்பவர் 49 வயதான சின்னதுரை. விவசாயியான இவருக்கு 2 மனைவிகள் உள்ளன. சின்னதுரையின் 2-வது மனைவி சுதாவிற்கும், திருவண்ணாமலை அண்ணாநகர் 7-வது தெருவை சேர்ந்த ஹாஜிபாஷா (35) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டு உள்ளது. பின்னர் அந்த நட்பு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதுக்குறித்து அறிந்த சின்னதுரை சுதாவை கண்டித்துள்ளார்.
ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் சந்திப்பு:
ஆனால், சுதா இதுபற்றி எல்லாம் கவலைபடாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் சுதாவும் அவரது கள்ளக்காதலன் ஹாஜிபாஷாவும் பெரியபாலியப்பட்டு கிராமம் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர்.
நாட்டுத்துப்பாக்கியோடு வந்த கணவன்:
இதனை குறித்து அறிந்த சின்னதுரை ஆத்திரம் அடைந்து வேடியப்பனூரை சேர்ந்த அவரது நண்பர் மணி (44) என்பவரிடம் நாட்டு துப்பாக்கியை வாங்கி கொண்டு அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு பேசிக்கொண்டிருந்த சுதா மற்றும் அவரது கள்ளக்காதலன் ஹாஜிபாஷா ஆகியோரை பார்த்து அவர் கடும் கோபம் அடைந்த சின்னதுரை உடனே தான் எடுத்து வந்திருந்த நாட்டு துப்பாக்கியால் ஹாஜிபாஷாவை நோக்கி சுட்டு உள்ளார்.
பொதுமக்கள் அதிர்ச்சி:
இதில் ஹாஜிபாஷாவிற்கு முழங்கை, இடுப்பு, தொடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. துப்பாக்கியால் சுடப்பட்ட சத்தத்தையும் ஹாஜிபாஷா அலறும் சத்தத்தையும் கேட்ட அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
காவல் நிலையத்தில் புகார்:
மக்களை வருவதை பார்த்ததும் சின்னதுரையும், சத்யமூர்த்தியும் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளனர். மேலும், படுகாயம் அடைந்த நிலையில் இருந்த ஹாஜிபாஷாவை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஹாஜிபாஷா திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிய சின்னதுரை, சத்யமூர்த்தி ஆகியோரை தேடுதல் வேட்டை நடத்தி கைது செய்துள்ளனர்.
மேலும், சின்னத்துரைக்கு நாட்டு துப்பாக்கியை கொடுத்த மணியும் கைது செய்யப்பட்டார். மனைவியில் கள்ளக்காதலன் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
