Kadaisi Vivasayi Others

"இந்த டீ -க்கு விலையே கிடையாது" ஆனந்த் மஹிந்திரா போட்ட லேட்டஸ்ட் ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Feb 10, 2022 03:10 PM

பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா டிவிட்டரில் தீவிரமாக இயங்கிவருபவர். தங்களுடைய தனித் திறமைகளால் சிறப்புற்று விளங்கும் நபர்கள் உட்பட தன்னுடைய கவனத்தை ஈர்க்கும் விஷயங்களை சமூக வலைதளங்களில் ஆனந்த் மஹிந்திரா பகிர்வது வழக்கம். அந்த வகையில் நேற்று டீ கடை ஒன்றைப் பற்றிய பதிவை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த இவர்," இந்த இடத்தில் டீ குடிப்பதற்கு விலை மதிப்பே கிடையாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

“A cup of tea there is priceless” – Anand Mahidra Latest Tweet

ஆளுக்கும் எடைக்கும் சம்பந்தமில்லையே..போலீஸ் எக்ஸாமில் இளம்பெண்ணின் உடையை அகற்றச் சொன்ன அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

விலைமதிப்பில்லா டீ

உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் இந்தியா - சீனா எல்லையோர கிராமமான மனா என்னும் கிராமத்தில் தான் ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டுள்ள டீ கடை இயங்கிவருகிறது. அதாவது, இந்திய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கடைசிக் கடை இதுவாகும். சந்தர் சிங் பத்வால் என்பவரால் 25 ஆண்டுகளாக இந்தக் கடை நடத்தப்பட்டு வருகிறது.

இந்திய - சீன எல்லையில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இப்பகுதி வரையில் மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். சுமார் 3200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்தக் கடைக்கு வரும் மக்கள் இங்குள்ள பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி உண்கின்றனர்.

இன்க்ரீடபிள் இந்தியா நிறுவனம் டிவிட்டரில் பகிர்ந்த இக்கடையின் புகைப்படத்திற்கு கமெண்ட் செய்த ஆனந்த் மஹிந்திரா," இந்தியாவில் செல்பி எடுப்பதற்கான சிறந்த இடம் இதுவா? இந்த ஸ்லோகன் பொருத்தமானதாக இருக்காது. இது விலைமதிப்பில்லாத டீயை குடிப்பதற்கான இடம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

“A cup of tea there is priceless” – Anand Mahidra Latest Tweet

டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆர்வத்துடன் இயங்கிவரும் ஆனந்த் மஹிந்திரா, தனித் திறமையுடன் இருப்பவர்களை அடையாளங்கண்டு அவர்களுக்கு உதவுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

டெல்லியில் இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்கள் முழுமையாக இல்லாத நிலையிலும் மோட்டார் பொருத்தப்பட்ட வாகனம் ஒன்றை லாவகமாக ஓட்டி தன்னுடைய சொந்த உழைப்பை வெளிப்படுத்தி ஆச்சர்யமூட்டிய பிர்ஜு ராம் என்பவரைப் பற்றி டிவிட்டர் வாயிலாக அறிந்த ஆனந்த் மஹிந்திரா அவரைப் பாராட்டியது மட்டுமல்லாமல் அவருக்கு தன்னுடைய நிறுவனத்தில் பணி ஒன்றினையும் வழங்கினார்.

அந்த வீடியோவை கடந்த மாதம் டிவிட்டரில் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா "இன்று எனது டைம்லைனில் இது கிடைத்தது. இது எவ்வளவு பழமையானது, எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை, ஆனால் இந்த மனிதரைப் பார்த்து நான் வியப்படைகிறேன்" என்று கூறி இருந்தார். மேலும், அவரை தனது நிறுவனத்தின் லாஸ்ட் மைல் டெலிவரிக்கு பிசினஸ் அசோசியேட் ஆக்கப் போவதாக குறிப்பிட்டிருந்தார். இது அப்போது பலராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுல இப்படி ஒரு பவுலிங்கா..பிரசித் கிருஷ்ணாவை பாராட்டிய ஹிட்மேன் ரோஹித்..!

Tags : #A CUP OF TEA THERE IS PRICELESS #ANAND MAHIDRA #INDIAN BUSINESSMAN

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. “A cup of tea there is priceless” – Anand Mahidra Latest Tweet | India News.