4 ஆயிரத்தை 'நெருங்கும்' எண்ணிக்கை... பாதிப்பு 600ஐத் 'தாண்டிய' மண்டலங்கள்... 'சென்னை' கொரோனா நிலவரம்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,204 ஆக உயர்ந்துள்ள நிலையில், அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் சென்னையில் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,839 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் இதுவரை அதிகபட்சமாக ராயபுரத்தில் 676 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
அதையடுத்து கோடம்பாக்கத்தில் 630 பேருக்கும், திரு.வி.க.நகரில் 556 பேருக்கும், தேனாம்பேட்டையில் 412 பேருக்கும், வளசரவாக்கத்தில் 319 பேருக்கும், அண்ணாநகரில் 301 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 274 பேருக்கும், அம்பத்தூரில் 205 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அடையாறில் 175 பேருக்கும், திருவொற்றியூரில் 84 பேருக்கும், பெருங்குடியில் 36 பேருக்கும், ஆலந்தூரில் 29 பேருக்கும், மாதவரத்தில் 54 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 28 பேருக்கும், மணலியில் 42 பேருக்கும் இதுவரை பாதிப்பு உறுதியாகியுள்ளது.
