ஒரே பேருந்தில் ஓட்டுநர், டிரைவராக காதல் ஜோடி.. சிலிர்க்க வைக்கும் 20 வருஷ 'லவ் ஸ்டோரி'!!..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Jul 21, 2022 02:39 PM

கேரள அரசு பேருந்து ஒன்றில், காதல் ஜோடி பணிபுரிந்து வருவது தற்போது இணையவாசிகள் மத்தியில் அதிகம் சுவாரஸ்யத்தை உண்டு பண்ணி உள்ளது.

kerala love couple working as driver and conductor in same govt bus

Also Read | "கோலி Captaincy'ல நான் மட்டும் ஆடி இருக்கணும், இப்போ கதையே வேற.." இந்திய அணி குறித்து ஸ்ரீசாந்த் சொன்ன கருத்து..

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் கிரி. இவர் அரசு பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். மேலும், இவரது காதலியும், மனைவியுமான தாரா, அதே அரசு பேருந்தில் கண்டக்டர் ஆகவும் பணிபுரிந்து வருகிறார்.

இவர்கள் இருவரும் ஒன்றாக பணியாற்றி வரும் அரசு பேருந்து என்பது மற்ற அரசு பேருந்தில் இருந்து அதிகம் வேறுபட்டுள்ளது. இதற்கு காரணம், அந்த பஸ்ஸில் பயணிகளின் பாதுகாப்பிற்காக 6 சிசிடிவி கேமராக்கள், அவசர கால ஸ்விட்ச், பாடல்களை கேட்கும் வசதி, வண்டியில் ஏறும் குழந்தைகள் விளையாடுவதற்காக பொம்மைகள், பேருந்து முழுக்க அலங்காரம் என தயார் செய்யப்பட்டுள்ளது தான்.

kerala love couple working as driver and conductor in same govt bus

அதே போல, பயணிகள் சென்று சேரும் இடம் பற்றிய விவரம் அறிவிக்கும் LED போர்ட், இந்த பேருந்தின் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. தாங்கள் பணிபுரிந்து வரும் அரசு பேருந்து, மிக அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக கிரி - தாரா தம்பதி, தங்களின் சொந்த பணத்தை செலவிட்டு இப்படி அலங்காரம் செய்துள்ளனர். மற்ற அரசு பேருந்துகளை விட, கிரி மற்றும் தாரா பணிபுரியும் பேருந்து, மிகவும் வேறுபட்டு இருப்பதால், வழக்கமான பயணிகளும் ஏராளமானோர் இந்த பேருந்திற்கு உள்ளனர்.

kerala love couple working as driver and conductor in same govt bus

பேருந்தை எந்த அளவுக்கு அழகாக்கி வைத்துள்ளார்களோ அதே அளவுக்கு கிரி - தாராவின் காதலும் மிக மிக அழகும், புனிதமும் ஆனது. ஏனென்றால், இவர்கள் இருவரும் சுமார் 20 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். கிரிக்கு 26 வயது இருக்கும் போது தாராவுக்கு வயது 24. அந்த சமயத்தில் இருவரும் சந்தித்து காதல் வயப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருவரின் காதலுக்கு பெற்றோர்களும் அதிக அளவில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது.

kerala love couple working as driver and conductor in same govt bus

அவர்கள் சம்மதம் தெரிவித்து, திருமணமும் ஏறக்குறைய முடிவான போது, ஜாதகம் ஒத்துப் போகவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் காத்திருந்த கிரி மற்றும் தாரா ஆகிய இருவரும், கொரோனா ஊரடங்கின்போது திருமணம் செய்து கொண்டனர்.

kerala love couple working as driver and conductor in same govt bus

பொதுவாக, திருமணம் செய்து கொள்ளும் பலரும் ஒவ்வொரு இடங்களிலோ அல்லது அதிகம் தூரம் உள்ள இடங்களிலோ தனித்தனியாக பணிபுரிந்து வருவார்கள். ஆனால் 20 ஆண்டுகள் காதல் செய்துவிட்டு ஒரே பேருந்தில் நடத்துனர் மற்றும் ஓட்டுநராக பணிபுரிந்து தங்களது நாட்களை செலவழித்து வருவது என்பதை விட நிச்சயம் அழகான ஒரு சுவாரஸ்ய காதல் கதை எங்கும் இருக்காது என்றே பலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த இந்த காதல் ஜோடியை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருவதோடு மட்டும் இல்லாமல், இந்த கதையை கேட்டு நெகிழ்ந்தும் போயியுள்ளனர்.

Also Read | "அமெரிக்கா To சென்னை.." 26 மணி நேர பயணம்.. மூதாட்டிக்காக ஒரு கோடி ரூபாய் செலவில் பறந்த தனி விமானம்.. பின்னணி என்ன??

Tags : #KERALA #KERALA COUPLE WORKING AS DRIVER #CONDUCTOR #GOVT BUS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kerala love couple working as driver and conductor in same govt bus | India News.