"அது மட்டும் இல்லன்னா என்ன ஆகி இருக்கும்??.." பேருந்தில் இப்படி சிக்கிய நபர்.. பதைபதைப்பு சம்பவம்
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூர் டிராபிக் போலீஸ் ஒருவர், தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ, பார்ப்போர் பலரையும் கடும் பீதியில் உறைய செய்துள்ளது.
சாலைகளின் நாம் வாகனங்களில் சென்று கொண்டிருக்கும் போது, எதிர்பாராத நேரத்தில் ஏதாவது விபத்துகள் நிகழலாம். அப்படி ஏதேனும் விபத்துக்கள் நிகழும் போது, பலரும் அதில் அதிர்ஷ்டவசமாக மரணம் வரை சென்று உயிர் தப்பிய வீடியோக்கள் மற்றும் செய்திகளையும் நாம் கேள்விப்பட்டிருப்போம்.
அந்த வகையில், பைக்கை ஓட்டி வந்த நபர், நூலிழையில் தப்பியது தொடர்பான வீடியோ ஒன்று, சிலிர்க்க வைத்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றை பெங்களூர் பகுதியில் உள்ள போலீஸ் ஒருவர், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், நபர் ஒருவர் பைக் ஓட்டிக் கொண்டு வரும் நிலையில், சாலையில் திரும்பும் போது சற்று தடுமாறி சாலையில் சென்று விழ போகிறார். அந்த சமயத்தில், அவரது எதிர் திசையில் இருந்து பேருந்து ஒன்றும் வரவே, நிலை தடுமாறிய அந்த பைக் ஓட்டி, பேருந்துக்கு அடியிலும் சென்று விழுகிறார். சரியாக பேருந்தின் சக்கரத்திற்கு அருகே அவர் சென்று விழ, கொஞ்சம் விட்டிருந்தால் அவரது தலை சிக்கி இருக்கும் நிலை இருந்தது. ஒரு கணம் அவர் உயிரிழந்திருக்கக் கூடும் என கருதிய நிலையில், அதிக பலம் உள்ள ஹெல்மெட் அணிந்திருந்ததால் உயிர் பிழைத்துக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக பஸ்சும் ரிவர்ஸ் எடுக்கப்பட, அதில் ஹெல்மெட் சிக்கி இருந்தது தெரிந்தது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் உதவி செய்ய பைக்கில் வந்த நபர் மீட்கப்பட்டார். ஒருவேளை அந்த நபர் ஹெல்மெட் அணியாமல், சாலையில் வந்திருந்தால் நிச்சயம் அவர் உயிரிழக்கவும் வாய்ப்பு உருவாகி இருக்கும். ஆனால், ஹெல்மெட் இருந்த காரணத்தினால் பேருந்துக்கு அடியில் ஹெல்மெட் சிக்கிக் கொண்டு அந்த நபரின் உயிரும் காப்பாற்றப்பட்டது.
இது தொடர்பான வீடியோவை வெளியிட்ட அந்த போலீசார், "நல்ல தரமான ISI ஹெல்மெட், அவர் உயிரை காப்பாற்றியது" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வீடியோவை பார்க்கும் பலர் கூட ஹெல்மெட் இல்லை என்றால் அந்த நபரின் நிலை என்ன இருக்கும் என குறிப்பிட்டு, வீடியோவைக் கண்டு உறைந்தும் போய் உள்ளனர். மேலும் சிலர், ஹெல்மெட் இருந்தால் கூட சாலையில் செல்லும் போது மிகவும் கவனமாக செல்ல வேண்டும் என்றும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read | ஒரே பேருந்தில் ஓட்டுநர், டிரைவராக காதல் ஜோடி.. சிலிர்க்க வைக்கும் 20 வருஷ 'லவ் ஸ்டோரி'!!..