'37 வருசத்துக்கு முன்ன செய்த உதவி...' 'நன்றி மறக்காத அன்னப்பறவை...' - என் சொந்த மகளா தான் பார்க்கிறேன்...!
முகப்பு > செய்திகள் > உலகம்துருக்கியை சேர்ந்த ஒருவர் அடிபட்ட அன்னப்பறவையை காப்பாற்றியது மட்டுமல்லாது தன் மகளாகவே வளர்த்து வருகிறார்.

துருக்கி நாட்டை சேர்ந்த 63 வயதான ரெஸிப் மிர்சான் (Recep Mirzan) என்பவர் 37 வருடங்களுக்கு முன்பு காயம்பட்டுக் கிடந்த அன்னப்பறவை ஒன்றை மீட்டுள்ளார்.
வீட்டுக்கு கொண்டுவந்த அந்த அன்னப்பறவையின் முறிந்த இறக்கைகளுக்கு சிகிச்சையும் அளித்து அதனை பாதுக்காத்து வைத்துள்ளார். அதன்பின் சில மாதங்களுக்கு பின் அந்த அன்னப்பறவையும் ரெஸிப் மிர்சனுடனே இருந்துள்ளது. அதற்கு க்ரிப் (Garip) எனவும் பெயரிட்டுள்ளார்.
பொதுவாக ஒரு அன்னபறவையின் சராசரி ஆயுட்காலம் 12 ஆண்டுகள் வரைதான் உயிர்வாழும். பாதுகாத்து வைத்தாலும் அதிகபட்சம் 30 ஆண்டுகள் வரைதான் அவை வாழும். ஆனால், க்ரிப் காப்பாற்றப்பட்டே 37 ஆண்டுகள் ஆகிவிட்டது.
மேலும் மனைவியை இழந்த மிர்சான் மாலை நேரங்களில் வாக்கிங் செல்லும்போதும் அவருடனேயே நடந்துசெல்லும் க்ரிப்பை இன்னமும் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள் மக்கள். மேலும் க்ரிப்பை தன் சொந்த மகளாகவே பார்க்கிறார் மிர்சான்.

மற்ற செய்திகள்
