பேஸ்புக்கில் காதலித்து ‘கல்யாணம்’.. எதர்ச்சையாக கணவர் வாட்ஸ்அப் DP-ஐ பார்த்த மனைவி.. அதிர்ச்சியில் உறைய வைத்த போட்டோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பேஸ்புக் மூலம் காதலித்து 2 பெண்களை திருமணம் செய்த இளைஞர் மீது முதல் மனைவி பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

கோவை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் அனுஷியா (28). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்றவர். இவருக்கு பேஸ்புக் மூலம் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த மாரிசெல்வம் (25) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. சில நாட்களில் இது காதலாக மாறியது. இதனை அடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டு கோவையில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். அந்த சமயத்தில் தனது கணவருக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள பைக் ஒன்றை அனுஷியா வாங்கி கொடுத்துள்ளார்.
இந்தநிலையில் அனுஷியாவுடன் திருமணம் ஆனதை மறைத்த மாரிசெல்வம், மீண்டும் பேஸ்புக் மூலம் நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த மாலதி (30) என்ற பெண்ணுடன் பழகி வந்துள்ளார். திடீரென ஒரு நாள் சிவகாசி செல்வதாக மனைவி அனுஷியாவிடம் பொய் சொல்லிவிட்டு பைக்கில் வேதாரண்யம் வந்துள்ளார். அங்கு மாலதியை மாரிச்செல்வம் 2-வதாக திருமணம் செய்துகொண்டு அவருடன் அங்கேயே தங்கிவிட்டார்.
இந்த நிலையில் கணவரின் வாட்ஸ்அப் புரொபைல் பிக்சரை எதர்ச்சையாக பார்த்த அனுஷியா, அதில் அவர் வேறொரு பெண்ணுடன் திருமண கோலத்தில் இருந்தை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளார். இதனை அடுத்து உடனே தனது பெற்றோருடன் வேதாரண்யம் சென்ற அனுஷியா, கணவர் மாரிசெல்வத்திடம் இதுதொடர்பாக விசாரித்துள்ளார். அப்போது மாரிச்செல்வம், அனுஷியாவை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுறது. இதனை அடுத்து அனுஷியா அளித்த புகாரின்பேரில் போலீசார் மாரிசெல்வத்தை கைது செய்தனர். மேலும் அனுஷியா வாங்கிக் கொடுத்த பைக்கையும் பறிமுதல் செய்தனர். பேஸ்புக் மூலம் பழகி இரண்டு பெண்களை இளைஞர் திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
