VIDEO : "இவருக்கு கட்டமே சரியில்ல போல... புதுசு புதுசா 'அவுட்' ஆகுறாரு பாவம்.." 'இந்திய' வீரருக்காக மீண்டும் ஒருமுறை வருந்திய 'ரசிகர்கள்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 329 ரன்களும், இங்கிலாந்து அணி 134 ரன்களும் எடுத்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி பேட்டிங் செய்து வரும் நிலையில், முன்னதாக இந்திய வீரர் புஜாரா வினோதமான முறையில் ஆட்டமிழந்துள்ளார். அவர் 7 ரன்களில் ஆடிக் கொண்டிருந்த போது, மொயீன் அலி வீசிய பந்தை ஷார்ட் லெக் திசையில் அடித்தார்.
அப்போது அங்கே நின்றிருந்த ஆலி போப், பந்தை பிடித்து விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸிடம் கையில் வீசி ரன் அவுட் செய்தார். அப்போது, கிரீஸுக்கு வெளியே நின்று கொண்டிருந்த புஜாரா, உள்ளே வர வேண்டி, பேட்டை கிரீஸ் லைனுக்குள் ஊன்றிய நிலையில், அது அங்கே இருந்த குழிக்குள் சிக்கியதால் அவர் கையிலிருந்து பேட் நழுவியது. இதனால், அவர் மிகவும் அதிர்ஷ்டமில்லாத வகையில் ரன் அவுட்டானார்.
இதற்கு முன்பு நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியிலும், சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த புஜாரா, டாம் பெஸ் வீசிய பந்தை டீப் ஸ்கொயர் லெக் திசையில் அடித்தார். ஆனால், ஸார்ட் ஸ்கொயர் லெக் திசையில் ஃபீல்டிங் நின்ற வீரரின் ஹெல்மெட்டில் பட்ட பந்து, வேகமாக பறந்தது. இந்த பந்தை மிட் ஆன் திசையில் நின்ற வீரர் கேட்ச் பிடித்தார். அவர் அடித்த ஷார்ட் எங்கேயோ செல்ல, ஹெல்மெட்டில் பட்டு வேறு திசை சென்று அவுட்டானதால் புஜாரா கடுப்பானார்.
It's Bad Luck🥺🥺🥺
Puji Departs...
Easy Run Out... @cheteshwar1 @BCCI #pujara #BCCI #INDvsENG #AskStar #INDvEND #INDvENG #IndiavsEngland
Hard To Digest....
Very Different Run Out pic.twitter.com/5iJBwzGFYz
— Rangineni Sai Krishna (@Ranginenikrish) February 15, 2021
The unlucky man - pujara!! 🤦♂️#INDvENG #pujara #cheteshwarpujara @BCCI
— jay parikh (@jayparikh21) February 15, 2021
Can we sya Pujara is modern-day Inzamam Ul Haq? Finding bizarre ways of getting out.#INDvsENG #pujara #Chennai #Chepauk
— Cricket Charcha (@CharchaCricket) February 15, 2021
@cheteshwar1 dismissal #INDvENG #pujara pic.twitter.com/TF8aibe0Gl
— sachin reddy (@sachinmunna9) February 15, 2021
It's not only the ball , even the bat is getting stuck in the pitch , let's blame the pitch #pujara
— Akhanda Nand Tripathi /Kaleen Bhaiya (@godoftrolls1) February 15, 2021
Bad Luck
Bad Luck Pro
Pujara Run-out#INDvENG @cheteshwar1 pic.twitter.com/fcJ0BYjuOI
— Chikmaya Kumar Dash (@ckdash045) February 15, 2021
அதே போல, மிகவும் ஒருமுறை அவர் அப்படி அவுட் ஆகியுள்ளதால், இவருக்கு நேரம் சரியில்லை என ரசிகர்கள் வருத்தத்துடன் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.