'தயவு செய்து நீ அவள மறந்திடு...' 'அவ எனக்கு மட்டும் தான்...' 'ஒரே பொண்ண 2 பேரு லவ் பண்ணி வந்த வினை...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை முத்தாபுதுப்பேட்டை, தெலுங்கு காலனியை சேர்ந்தவர் 18 வயதான பிரகாஷ். பிரகாஷை கடந்த 15-ம் தேதி வழிமறித்த ஒரு கும்பல் கத்தியைக் காட்டி, மிரட்டிவிட்டுத் தப்பிச் சென்றனர். அதன் பிரகாஷின் அம்மா சுமதி, முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் கொலை மிரட்டல் விடுத்தது யாரென்று விசாரித்தத்தில் பிரகாஷின் பள்ளியில் உடன் படித்த திருநின்றவூர், பிரகாஷ் நகரைச் சேர்ந்த பிரவீன் ராஜும், அவரின் நண்பர்களும் எனத் தெரிந்ததுள்ளது.
அதன்பின், விசாரணையில் ஈடுபட்ட போலீசார் பள்ளி காதல் கதையால் தான் கொலை செய்யும் வரை சென்றுள்ளதாக கூறினர். மேலும், பிரகாஷும் பிரவீன்ராஜும் ஒரே பள்ளியில் படித்து, ஒரே பெண்ணை இருவரும் காதலித்திருக்கின்றனர். அந்த பெண்ணுக்காக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, இந்த தகவல் பள்ளி நிர்வாகத்துக்குத் தெரிந்ததும் இருவரும் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர். அதனால் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாத இருவரும் கிடைத்த வேலைகளைச் செய்துவருகின்றனர்.
மீண்டும் பல வருடங்கள் கழிந்து பிரகாஷ், பெயின்ட்டராகப் பணியாற்றிவருகிறார். பிரவீன்ராஜ், அரசு நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்கிறார். இருப்பினும் பழைய காதல் விரோதத்தை மறக்காமல் மீண்டும் காதல் முன்விரோதம் காரணமாக பிரகாஷை, பிரவீன்ராஜ் நண்பர்களுடன் சேர்ந்து மிரட்டியிருக்கிறார்.
மேலும் பிரவீன்ராஜ், அவரின் நண்பர்கள் மணிகண்டன் (19), பிரேம்குமார் என்கிற கோலி (23), ரோஸ் என்கிற மோகன்ராஜ் (21), சாலமன்ராஜா என்கிற இலக்கியா (20) ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.
பிரகாஷை, பிரவீன் ராஜ் கத்திமுனையில் மிரட்டும்போது, 'அவள் எனக்குத்தான். நீ அவளை மறந்துவிடு' என்று கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.

மற்ற செய்திகள்
