'நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா'... காதலித்து ஏமாற்றியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி ட்விஸ்ட்!
முகப்பு > செய்திகள் > உலகம்தனது வருங்கால கணவராக வேண்டிய நபர் ஒருவர், தன்னை ஏமாற்றி பிரிந்து சென்ற நிலையில், அதற்காக அந்த பெண் எப்படி அவரை பழி வாங்கினார் என்பது குறித்து அந்த பெண்ணே தெரிவிக்கும் டிக் டாக் வீடியோ தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

ஸ்காட்லாந்தின் அயிர்ஷிர் (Ayrshire) என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ஜேட் புர்விஸ் (Jade Purvis). இவர், மூன்று வருடங்களாக ஒருவரை காதலித்து வந்ததாகவும், அவருடன் நிச்சயம் செய்து கொண்டதாகவும் வீடியோவில் தெரிவிக்கிறார். ஆனால், தான் திருமணம் செய்து கொள்ளவிருந்த வருங்கால கணவர், தன்னை ஏமாற்றி விட்டு, பேஸ்புக் மூலம் சந்தித்த பெண் ஒருவரை காதலிக்கத் தொடங்கியுள்ளார்.
தனது வருங்கால கணவர் காதலிக்கும் பெண்ணும், வேறொரு ஆணை ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து ஏமாற்றியதாக ஜேட் குறிப்பிடும் நிலையில், நானும், அந்த பெண்ணின் காதலரும் இணைந்து தங்களை ஏமாற்றியவர்களை பழி வாங்கத் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, ஜேட் தனது வருங்கால கணவரைத் தன்னிடம் இருந்து பிரித்த பெண்ணின் காதலரைத் திருமணம் செய்து கொண்டு, 4 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாக கூறி, திருமணமான புகைப்படங்களையும் அதில் ஜேட் பதிவிட்டுள்ளார். முன்னதாக, இந்த சம்பவம் 7 ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்றதாக கூறும் ஜேட், நாங்கள் வாழ்வில் வென்று விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ அதிகம் வைரலான நிலையில், சுமார் ஒரு மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களைக் கடந்து பல விதமான கருத்துக்களையும் பெற்று வருகிறது. அது மட்டுமில்லாமல், சில நெட்டிசன்கள், 'இத்தனை ஆண்டுகள் கழித்தும் அவர் மீது உங்களுக்கு கோபம் குறையவில்லையா என்றும், மேலும் சிலர், 'உண்மையிலேயே இது சிறப்பான பழிவாங்கல் தான். வாழ்த்துக்கள்' என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
