'என் ரெண்டு காலும் போய்டுச்சு...' 'நீ சின்னப்புள்ள...' 'வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ...' 'மனைவி எடுத்த முடிவு...' - நெகிழ வைக்கும் காதல்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, மேலவிடுதி கிராமத்தை ராஜாவும், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விமலாவும் திருப்பூரில் பணிபுரிந்து கொண்டிருந்தனர்.
சில வருட வேலையில் கிடைத்த சேமிப்பை வைத்து சிறிய காஜா மெஷின் வாங்கி முதலாளி ஆனார். இந்த காலகட்டத்தில் தான் விமலாவிற்கும், ராஜாவிற்கும் காதல் மலர்ந்ததுள்ளது
சில மாதங்களுக்கு பின் திருமணம் செய்து கொண்ட இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் திருமணமாகி 6 மாதம் கழித்து திடீரென்று ஒருநாள் தன் காதல் கணவர் ராஜாவுக்கு கால்களில் வலி ஏற்பட, திருப்பூரில் சில மருத்துவமனைகளில் சிகிச்சை பார்த்தில் கையிலிருந்த பணத்தோடு சின்ன நிறுவனத்தையும் விற்று அந்த பணமும் செலவானது. ஆனால் கால் வலி குணமாகவில்லை.
இதனால் சொந்த ஊருக்கு சென்று சிகிச்சை எடுக்கப்போவதாக முடிவு செய்து விமலாவை அவரது பெற்றோர் தர்மபுரிக்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு ராஜா மட்டும் புதுக்கோட்டைக்கு கிளம்பியுள்ளார். புதுக்கோட்டைக்கு சென்ற ராஜா, விமலாவுடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளார். இப்படியே பல மாதங்கள் போன நிலையில் விமலாவை அவரது உறவினர்கள் விமலாவுக்கு மறுமணம் செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால் ராஜாவின் காதலை மறக்கமுடியாத விமலா யாருக்கும் சொல்லாமல் ஒரு நாள் கிளம்பி மேலவிடுதி கிராமத்திற்கு வந்துவிட்டார். அங்கு சென்று பார்த்த விமலாவிற்கு பேரதிர்ச்சி காத்துக்கொண்டிருந்துள்ளது. ராஜா இதுவரை விமலாவை தொடர்பு கொள்ளாததற்கு காரணமும் கிடைத்தது.
மனைவியை பார்த்து அழுத ராஜா, 'நான் ஊருக்கு வந்து சிகிச்சை எடுத்தேன். ஆனா சரியே ஆகல, ஒரு கால் என் பிறந்த நாள் அப்போ கழன்று விழுந்துவிட்டது. மற்றொரு காலிலும் பாதிப்பு ஏற்பட்டதால் அந்தக் காலையும் வெட்டி எடுத்துவிட்டார்கள். இப்போது என்னால் ஒன்னுக்கு, ரெண்டுக்கு போகக் கூட யாராவது துணை வேண்டும். நீ சின்னப்புள்ள இனிமேல் என்னுடன் உனக்கு வாழப்பிடிக்காது. உன் பெற்றோர் சொல்வதுபோல யாரையாவது திருமணம் செய்துகொண்டு நீயாவது நிம்மதியா வாழ்க்கையை நடத்து'' என்று கண்கள் கலங்க கூறியுள்ளார்.
இதை கேட்டுக்கொண்ட விமலா...''நமது காதல் உயிரோடு கலந்தது. வெறும் உணர்ச்சிகளுக்கானது மட்டும்மல்ல'' என்று கூறியுள்ளார். தற்போது ராஜாவின் சிறுநீர், மலம் வரை அள்ளி அவரை அன்போடு பார்த்துக்கொண்டு கூலி வேலைக்குச் சென்று அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பத்தை கவனித்து வருகிறார். இவர்களின் உண்மை காதலுக்கு சாட்சியாக 3 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்த தூய்மையான காதல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.