'உன்மேல வச்ச நம்பிக்கைய செதச்சுட்டல...' 'அப்போ என்கிட்ட சொன்னதெல்லாம் பொய்...' - லிவிங்_டூகெதரோட டிமிக்கி கொடுக்க நெனச்ச காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்ந்து விட்டு, காதலியை திருமணம் செய்ய மறுத்த காதலனை போலீசார் கைது செய்தனர்..

சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம். இவர் வியாசர்பாடியை சேர்ந்த 22 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், ஸ்ரீராமின் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லை என்பதால் அவரை கவனித்துக்கொள்ள வேண்டும் என தன் காதலியை வீட்டிற்கு அழைத்து தங்க வைத்துள்ளார். 2 மாதங்கள் ஸ்ரீராம் வீட்டில்தான் அந்த இளம் பெண்ணும் தங்கி இருந்துள்ளார். திருமணத்துக்கு முன்பே உடல் நிலை சரியில்லாமல் இருந்த ஸ்ரீராமின் காதலி தன் அம்மாவிற்கு உதவியாக இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், எப்படியும் நாம் விரைவில் திருமணம் செய்துக்கொள்ள போகிறோமே என திருமண ஆசைக்காட்டி எல்லை மீறியுள்ளார். தாலி கட்டாமலேயே இருவரும் கணவன் மனைவி உறவில் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். கொஞ்சம் நாள்களிலேயே ஸ்ரீராமுக்கு காதலி போரடித்து போனதாக கூறப்படுகிறது.
இதன்காரணமாக, ஸ்ரீராம் , தன் காதலியை திருமணம் செய்ய மறுத்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ள அந்த பெண் வற்புறுத்தியும் ஸ்ரீராம் மாறவில்லை. இதனால், காதலன் மேல் வைத்திருந்த நம்பிக்கைய இழந்து மனமுடைந்த அந்த இளம்பெண் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து ஸ்ரீராம் மீது பாலியல் பலாத்காரம், நம்பிக்கை மோசடி என இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மற்ற செய்திகள்
