இப்போ என்ன 'கல்யாணம்' பண்ணிக்க போறியா இல்லியா?... 'பெட்ரோலை' எடுத்துக் கொண்டு... 'இளைஞரின்' செயலால்... அடுத்தடுத்து நடந்த 'கொடூரம்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாராஜஸ்தான் மாநிலம் சிகர் மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் 23 வயதான இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் போட்டி தேர்வுக்கு வேண்டி பயிற்சி மையம் ஒன்றில் சென்று படித்து வந்துள்ளார். அந்த பெண்ணுடன் வாலிபர் ஒருவரும் சேர்ந்து படித்துள்ளார்.

அந்த வாலிபர் இளம்பெண்ணிடம் தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு அந்த இளம்பெண் மறுப்பு தெரிவிக்கவே விரக்தியடைந்த அந்த இளைஞர், பெட்ரோலுடன் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற இளைஞர், யாரும் எதிர்பாராத வகையில் பெண்ணின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.
இளைஞரின் இந்த கொடிய செயலால் பதறிப் போன பெண்ணின் பெற்றோர், உடனடியாக தங்களது மகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து பயத்தில் அந்த இளைஞரும் விஷமருந்தி தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அவரை காப்பாற்றி போலீசார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
