UK வில் தொடங்கி US வரை.. ஒரே ஒரு பயணிக்காக பறந்த விமானம்.. மறக்க முடியாத அளவு சம்பவம்
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா பெருந்தொற்று பலரது வாழ்க்கையை தலை கீழாகக் புரட்டிப் போட்டுள்ளது. பிடித்த இடங்களுக்கு செல்வது, வெளியூர் பயணம் போன்றவற்றை முற்றிலுமாக இல்லாமல் செய்திருந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் தொடங்கியுள்ளது. அந்தவகையில், பிரபல டிக் டாக் பிரபலம் எட்டு மணி நேரம் தனி ஒரு நபராக விமானத்தில் பயணித்தது தொடர்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளதை பற்றி இங்கு காண உள்ளோம்.
லண்டனில் இருந்து அமெரிக்காவிற்கு விமானத்தில் பயணித்த பிரபல டிக்டாக் யூசர் Kai Forsyth என்பவருக்கு நடந்த அனுபவத்தை தான் பகிர்ந்துள்ளார். லண்டலில் இருந்து ஃபோர்சித் விமானத்தில் ஏறியபோது, அந்த விமானத்தின் ஒரே பயணி அவர் மட்டும் தான் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார். எட்டு மணி நேரம் எந்தப் பயணியும் இல்லாமல் விமானப் பயணம் மேற்கொண்டார் ஃபோர்சித்.
விமானம் முழுக்க காலியாக இருந்ததைப் பார்த்து குஷியான டிக்டாக் பிரபலம், தனது ஸ்மார்ட்போனில் வீடியோக்களை உருவாக்கி, டிக்டாக்கில் வெளியிட்டார். மேலும் விமானத்தில் இருந்த ஒரே நபர் நான் மட்டுமே என்று கேபின் குழுவினர் தெரிவித்தனர் என்று வீடியோவின் கேப்ஷனில் பகிர்ந்தார்.
தனது டிக்டாக் கணக்கில் வீடியோவில் உள்ள காட்சிகள் விமானம் புறப்படுவதற்கு முன் தொடங்கி, விமானத்தில் உள்ள காலி இருக்கைகள் மட்டுமே இடம்பிடித்தன. இதுவரை தனது வாழ்வில்மேற்கொண்ட விமானப் பயணங்களிலேயே, இது தான் சிறந்தது என்று ஃபோர்சித் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அவரிடம் நிறைய தின்பண்டங்கள் இருப்பதையும் வீடியோவில் பகிர்ந்தார். ஃபோர்சித் ஒரே ஒரு பயணியாக இருந்தாலும், அவர் விரும்பும் சிற்றுண்டி வகைகளை எந்த வரம்பும் இல்லாமல் வழங்கியதாகத் தெரிவித்தார்.
உலகில் எங்கும் நடந்திடாத அளவுக்கு, பயணிகளின் எண்ணிக்கையைவிட, விமான ஊழியர்களான பணிப்பெண்கள், விமானிகள் அதிகமாக இருந்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். விமானத்தில் தனியாக, விமான கேபின் குழுவினருடன் உரையாடுவது போன்ற காட்சியும் பதிவாகியுள்ளது. மேலும், 'நாங்கள் மணிக்கணக்கில் திரைப்படங்களைப் பார்த்தோம், கணக்கே இல்லாமல் உணவுகளை சாப்பிட்டோம். இது எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது' என்று ஃபோர்சித் பகிர்ந்த வீடியோ இணையத்தில் காட்டூத்தீ போல் வைரலாகி வருகிறது.
நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவை பார்த்து கனவில் தானல் சிலருக்கு இப்படி நடக்கும் ஆனால், நீங்கள் கொடுத்து வைத்தவர் என்று பாராட்டி வருகின்றனர்.