அடிபொளி சேச்சி...! 'வலி'யில அழுறாங்களா 'சிரிக்குறாங்களா'ன்னு கன்ஃபியூஸ் ஆயிடுச்சு...! ஹலோ 90'S கிட்ஸ் இதுக்கெல்லாம் அழக்கூடாது...! - வைரல் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Oct 07, 2021 09:41 PM

மூக்குத்தி குத்தி முகமே சிவந்து துள்ளிக்குதித்து  ஓடிய மலையாள பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

kerala girl jumps poking her Nose Stud viral video

பொதுவாக இந்தியாவில் பெண்களுக்கு மூக்கில் மூக்குத்தி போடும் வழக்கம் காலம்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இரு தலைமுறைகளுக்கு முன் பெண்கள் இரண்டு மூக்குப் பகுதியிலும் மூக்குத்தி போட்டு இருப்பர். இப்போதிருக்கும் பெண்களும் நவின காலத்திற்கு ஏற்ப மூக்கின் ஒரு புறம் தங்களுக்கு பிடித்தவாறு குத்திக் கொள்கின்றனர்.

மூக்குத்தி எப்போதும் சிறு வயதிலேயே குத்தப்படும். ஒரு சில பெண்கள் சிறுவயதில் மூக்கு குத்துவதற்கு பயந்து திருமணத்திற்கு பிறகும் குத்தி கொள்கின்றனர். இல்லையென்றால், மூக்குத்தி போடாமலும் இருக்கின்றனர். இது அனைத்தும் தனி நபர் விருப்பம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கேரளாவை சேர்ந்த மலையாள பெண் ஒருவர் தன கணவரோடு சென்று நகைக்கடையில் மூக்குத்தி குத்திக் கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. அந்த வீடியோவில் அளவு பார்த்து மூக்குத்தி குத்தும் போது அவர் வலியால் துள்ளி குதித்து ஓடும் நிகழ்வு அனைவரையும் ரசிக்க வைக்கிறது.

அதோடு, அந்த பெண் மூக்குத்தி குத்திய வலியோடு 'நல்ல பங்கியல்லே' என மலையாளத்தில் அழகாக இருக்கிறது தானே என சிவந்த முகத்தோடு கேட்கும் போது இல்லையென்றா சொல்ல முடியும்?

தற்போது இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kerala girl jumps poking her Nose Stud viral video | India News.