வாத்தி கம்மிங்... விஜய் என்ன பாத்து தான் 'INSPIRE' ஆனாரு.. ஜாலியாக சொன்ன அஸ்வின்.. சுவாரஸ்ய சம்பவம்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம், மழை காரணமாக ஒரு பந்து கூட வீசாமல் கை விடப்பட்டது.
முன்னதாக, இந்த டெஸ்டின் முதல் நாளில், டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன் படி, தொடக்க வீரர்களான கே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் சிறந்தவொரு பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.
மயங்க அகர்வால் 60 ரன்களில் அவுட்டாக, அடுத்து புஜாரா முதல் பந்திலேயே அவுட்டாகி, வந்த வேகத்தில் கிளம்பினார். தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி, 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம், தொடக்க வீரரான ராகுல் மட்டும் நிலைத்து நின்று, சிறப்பாக ஆடி சதமடித்தார்.
குறுக்கிட்ட மழை
முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 1222 ரன்களுடனும், ரஹானே 40 ரன்களுடனும் அவுட்டாகாமால் களத்தில் இருந்தனர். இதனிடையே, இரண்டாம் நாளான நேற்று, மழை பெய்தது. தொடர்ந்து, மழையின் தாக்கம் அதிகமாக இருந்ததால் ஒரு பந்து கூட வீசாமல், இரண்டாம் நாள் போட்டி ரத்தானது.
பிசிசிஐ வீடியோ
முதல் நாளில் சிறந்த ரன் குவிப்பில் ஈடுபட்ட இந்திய அணி, நேற்றும் தொடர்ந்து பேட்டிங் செய்திருந்தால் இன்னும் சிறப்பான ரன் குவிப்பில் ஈடுபட்டிருக்க முடியும். இதனிடையே, மழை பெய்து போட்டி நடைபெறாமல் போனது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் பிசிசிஐ சிறப்பான வீடியோ ஒன்றை தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அஸ்வின் மற்றும் ஷர்துல்
இந்திய அணி வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஷர்துல் தாக்கூர் கலந்துரையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்ட பிசிசிஐ, 'செஞ்சுரியனில் இருண்ட நாளை, மறந்து விட்டு உங்களை பிரகாசமாக்க ஒரு வீடியோ. டான்ஸ், கம்பேக் மற்றும் பலவற்றை குறித்து, அஸ்வின் மற்றும் ஷரதுல் தாக்கூர் உரையாடும் 'வாக் அண்ட் டாக்' நிகழ்ச்சி' என குறிப்பிட்டிருந்தது.
டான்ஸ் வீடியோ
இந்த வீடியோவில், அஸ்வின் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் சந்தித்த கசப்பான அனுபவங்கள், தனது கிரிக்கெட் பயணம் என பலவற்றைக் குறித்து, ஷர்துல் கேட்கும் கேள்விகளுக்கு அஸ்வின் பதிலளித்து வருகிறார். தொடர்ந்து, அஸ்வினிடம், 'நான் உங்களது டான்ஸ் வீடியோக்களை நிறைய பார்த்துள்ளேன். எனது டான்ஸ் வீடியோக்கள் நிறைய பகிரப்பட்டுள்ளது. அதைப் பற்றி நான் பேசுவதற்கு முன்னால், உங்களது நடனத்தை பற்றிக் கூறுங்கள்' என ஷர்துல் கேட்கிறார்.
வாத்தி கம்மிங் ஸ்டெப்
இதற்கு பதிலளித்த அஸ்வின், 'நான் என்னை பார்க்கும் போது, குறிப்பிட்ட வழியில் சிறப்பாக நடனமாட வேண்டும் என விரும்புவேன். ஆனால், எனக்கு சிறப்பாக ஆட வராது' என்றார். தொடர்ந்து, 'நான், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஹரி ஆகியோர் வாத்தி கம்மிங் பாடலுக்கு முதலில் ஆடினோம். ஆனால், உடனடியாக அதனை வெளியிடவில்லை. நீங்கள், ஷ்ரேயாஸ் மற்றும் ரோஹித் ஆகியோர் நடனமாடிய வீடியோ ஒன்றைப் பார்த்து விட்டு தான் எனது வாத்தி கம்மிங் வீடியோவை நான் பகிர்ந்தேன். நீங்கள் சிறப்பாக ஆடியிருந்தீர்கள்' என அஸ்வின் தெரிவித்தார்.
இன்ஸ்பயர் ஆன விஜய்
தொடர்ந்து கேள்வி கேட்ட ஷர்துல், 'ஆனால், நீங்கள் உங்கள் தோள் பட்டையை சிறப்பாக சாய்த்து, வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆடுனீர்கள். அது நன்றாக இருந்தது. அது உங்களின் பவுலிங் ஸ்டெப் காரணமாக அப்படி அமைந்ததா?' என கேட்டார்.
On an otherwise gloomy day in Centurion, here's something to brighten up your feed 👌🙂
Of dance moves, comebacks and more - here's a fun Walk & Talk, featuring @ashwinravi99 & @imShard. 👍 👍 - By @28anand
Full video 🔽 #TeamIndia #SAvINDhttps://t.co/3GKonIoqWb pic.twitter.com/LwR8ndGjLC
— BCCI (@BCCI) December 27, 2021
வாத்தி கம்மிங்
வாத்தி கம்மிங் ஸ்டெப் போட்டுக் கொண்டே பதில் சொன்ன அஸ்வின், 'இல்லை, அந்த ஸ்டெப் அப்படி தான் இருக்கும். ஒரு வேளை நடிகர் விஜய், என்னைப் பார்த்து தான் இன்ஸ்பயர் ஆகி, அந்த ஸ்டெப்பை போட்டிருப்பார்' என அஸ்வின் ஜாலியாக தெரிவித்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு, விஜய் நடிப்பில், 'மாஸ்டர்' படத்தில், 'வாத்தி கம்மிங்' பாடல் வெளியானது முதலே பட்டித் தொட்டியெங்கும் ஹிட்டடித்தது. இந்திய கிரிக்கெட் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணி, பாலிவுட் பிரபலங்கள் என பலர் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடியது அனைத்தும் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.