VIDEO: ஏன் ரோகித் ஷர்மா திடீர்னு 'இப்படி' பண்ணினாரு...? என்னமோ 'சிராஜ்' சொல்லியிருக்கார்னு மட்டும் தெரியுது...! - 'டிரெண்ட்' ஆகும் வைரல் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் நியூசிலாந்து டி-20 போட்டியில் ரோஹித் சிரித்தவாறு சிராஜை தலையில் ஓங்கி அடிக்கும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் நேற்று முன்தினம் (17-11-2021) மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடர் ஜெய்ப்பூரில் மைதானத்தில் தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை எடுத்தது.
165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்தியா நியூசிலாந்து போட்டியின் போது கேப்டன் ரோகித் சர்மா சிராஜை தலையில் ஓங்கி பளார் என்று அடிப்பது போல ஒரு காட்சி தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
இந்திய அணியின் இளம் வீரரான சிராஜ் கடந்த 2018-ஆம் ஆண்டிற்குப் பிறகு இப்போதுதான் டி-20 கிரிக்கெட்டில் இணைந்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி சிராஜிக்கு இந்த டி-20 கிரிக்கெட்டில் அதிக எதிர்பார்ப்புடன் களமிறக்கப்பட்டார்.
இந்நிலையில், முதல் போட்டியில் 4 ஓவர்கள் வீசிய சிராஜ் 39 ரன்களை கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். அதோடு, கடைசி ஓவர் வீசும்போது மிட்செல் சான்ட்னர் அடித்த பந்தை தடுக்க நினைத்து கையில் காயமடைந்து கொண்டார்.
அடுத்து சிறிது நேரத்திலேயே ரத்தம் வந்தாலும் அதனை பொருட்படுத்தாது பேண்டேஜ் ஒட்டி அவர் தனது ஓவரை முடித்திருந்தார். அப்போதுதான் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சிராஜை தலையில் ஓங்கி பளார் என்று அடிப்பது போல ஒரு காட்சி தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
ரோஹித், ராகுல், சிராஜ் ஆகிய மூவரும் எதையோ பார்த்துக் கொண்டிருக்க அதன் பின்னர், உடனடியாக ராகுல் மற்றும் ரோஹித் ஆகியோர் சிராஜை பார்க்கின்றனர். அப்போது ரோஹித் சிரித்தவாறு சிராஜை தலையில் ஓங்கி அடிக்கிறார்.
Why did Rohit hit Siraj🤣🤣🙄#INDvNZ #RohitSharma pic.twitter.com/EjqnUXts3v
— Bhanu🔔 (@its_mebhanu) November 17, 2021

மற்ற செய்திகள்
