VIDEO: யாருங்க 'கவுண்ட்' பண்றீங்க...? அடேங்கப்பா...! 'இதெல்லாம் தாறுமாறு...' 'மணப்பெண் பகிர்ந்த வீடியோ...' - டிரெண்டிங் செய்யும் நெட்டிசன்கள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமணப்பெண் ஒருவர் திருமண நகைகளை அணிந்தபடி புஷ்அப் எடுக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

அந்த வீடியோவில் வரும் மணப்பெண்ணின் பெயர் ஆன்னா அரோரா. இவர் தன்னுடைய திருமணத்தன்று அந்த வீடியோவை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
உணவியல் நிபுணராக பணிபுரிந்து வரும் ஆன்னா, மாடலிங் துறையிலும் தன் திறமையை காட்டி வருகிறார். இவர் அடிக்கடி பிட்னெஸ் குறித்த பதிவுகளை பகிர்ந்து வந்துள்ளார். அந்த வகையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் சிவப்பு நிற லெஹெங்காவில் புஷ் அப் செய்கிறார். அப்போது அவர் முழு மணக்கோலத்தில் காணப்படுகிறார்.
பொதுவாக திருமண சேலை, மற்றும் நகைகளுடன் நடந்து செல்வதற்கே பெண்கள் சிரமப்படுவார்கள். ஆனால், இவர் அசால்ட்டாக புஷ் அப்ஸ் எடுத்து கெத்து காட்டியுள்ளார். இது திருமணத்திற்கு முன்பு எடுக்கப்படும் போட்டோஷூட் ஆக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

மற்ற செய்திகள்
