VIDEO: ரொம்ப நேரமா 'தொங்கிட்டு' இருந்துச்சு, திடீர்னு...' 'சாலையெங்கும் அப்படி ஒரு மரண ஓலம்...' - என்ன இது, இம்புட்டு பெருசா இருக்கு...? - வைரல் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > இந்தியாயாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சாலையில் பாம்பு ஒன்று அனைவரையும் தெறித்து ஓட விட்டது.

அடர்ந்த புதர்கள் மற்றும் காடுகளில் விஷப் பாம்புகள் காணப்படும். ஆனால் சமீப காலங்களாக சூழலியல் மாற்றங்களாலும் காடுகள் அழிக்கப்பட்டு வருவதாலும் வன விலங்குகள் மக்கள் அதிகமாக புழங்கும் வெளிக்கு வந்து அச்சுறுத்துகின்றன.
இப்படியிருக்க, பொதுமக்கள் அதிகமாக நடந்து செல்லும் சாலையில் தீடிரென வானில் இருந்து நீளமான பாம்பு ஒன்று விழுந்தால் அனைவரும் அப்படியே உறைந்து போயினர்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு நீளமான பாம்பு ஒன்று வானத்திலிருந்து பறந்து வந்து சாலையில் விழுகிறது. அதை பார்த்த பொதுமக்கள் துண்டை காணோம் துணியை காணோம் என உயிரை காப்பாற்ற சாலையில் அலறியடித்து கொண்டு ஓட தொடங்கினர்.
இந்த பாம்பினால் யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த பாம்பு கம்பி ஒன்றில் நீண்ட நேரமாக அமர்ந்துள்ளது. மெதுவாக பாம்பு அதன் பிடியை தளர்த்தி தரையில் விழுகிறது. பாம்பு கம்பியில் இருப்பதைக் கண்டு அங்கிருந்த மக்கள் கத்தி கூச்சலிடுகின்றனர். பாம்பு சாலையில் விழுந்த உடனை அதனை பாதுகாப்புடன் மீட்பதற்காக மீட்பு படையினரும் அங்கு வந்திருந்தனர்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.பாம்பு கம்பி மீது இருந்த வரை அந்த இடத்தில் கெத்தாக இருந்த பலரும் சாலையில் விழுந்த உடனே அய்யோ அம்மா என அலறியடித்து ஓடினர்.
A massive snake falling from the sky is my worst nightmare 🐍😨#viralhog #snake #spooktober #nope #nightmarefuel pic.twitter.com/VS9P6q9Spy
— ViralHog (@ViralHog) October 15, 2021

மற்ற செய்திகள்
