"கொழந்த மனசுயா உனக்கு!!".. 'இதயங்களை' வென்ற 'வார்னர்'!.. நெகிழ்ந்து ஆர்ப்பரித்த 'ரசிகர்கள்'.. 'வைரல்' வீடியோ!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், டேவிட் வார்னர் செய்த செயல் ஒன்று, ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![david warner heartwarming gesture wins hearts david warner heartwarming gesture wins hearts](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/david-warner-heartwarming-gesture-wins-hearts.jpg)
கிரிக்கெட் தொடர்களில் மிகவும் பிரபலமான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர், தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில், இங்கிலாந்து அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் (David Warner), மிகச் சிறப்பாக ஆடி ரன் குவித்தார். அவர் சதமடிப்பார் என கருதப்பட்ட நிலையில், 95 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். முன்னதாக, முதலாவது டெஸ்ட் போட்டியிலும், 94 ரன்களில் வார்னர் ஆட்டமிழந்திருந்தார்.
இந்நிலையில், வார்னர் ஆட்டமிழந்து வெளியேறிய போது தான் அந்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியது. மைதானத்தை விட்டுச் சென்ற வார்னரின் சிறப்பான இன்னிங்ஸிற்கு, மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள், கோஷம் செய்து வாழ்த்தினர். அப்போது, அங்கு சில சிறுவர்கள் கூடியிருந்து ஆர்ப்பரித்த நிலையில், அவர்கள் அருகில் நடந்து சென்ற வார்னர், அதில் ஒரு சிறுவனிடம் தன்னுடைய க்ளவுஸை அன்பளிப்பாக அளித்து விட்டுச் சென்றார்.
Day = made#Ashes pic.twitter.com/3srONbrDky
— cricket.com.au (@cricketcomau) December 16, 2021
வார்னரின் செயலால் மகிழ்ச்சியில் திளைத்த அந்த சிறுவன், தனது அதிர்ஷ்டத்தால், ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று விட்டான். வார்னரின் இந்த செயலால், மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மேலும் கரகோஷங்களை ஏழுப்பினர். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலர் அவரது செயலுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
பொதுவாக, இணையதளங்களில் அதிகம் ஆக்டிவாக இருக்கும் வார்னரின் வீடியோக்கள் மற்றும் அவரது சிறப்பான குணத்திற்கென்றே ரசிகர்கள் அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)