VIDEO: பயங்கர 'கோவமா' இருக்குது...! கொஞ்சம் பொறுங்க 'வெயிட்' பண்ணுவோம்...! 'கொஞ்சம் நேரம் சைலண்டா நின்னுட்ருந்த யானை திடீர்னு...' - நடுங்க வைத்த 'திக்திக்' நிமிடங்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மலைப்பாதையில் செல்லும் பேருந்தை காட்டு யானை ஒன்று வழிமறித்து பேருந்துக் கண்ணாடியை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி (Nilgiri) மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பொதுவாகவே யானைகள் நடமாட்டம் காணப்படும். ஆனால் கடந்த சில நாட்களாக யானைகள் அடிக்கடி பேருந்து செல்லும் பாதைகளில் இறங்கி மக்களை அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று (25-09-2021) காலை 9 மணியளவில் கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு அரசுப் பேருந்து ஒன்று சென்றுள்ளது. அப்போது, மேல்தட்டப்பள்ளம் என்னுமிடத்தில் காட்டுயானை (Wild Elephant) ஒன்று திடீரென பேருந்து நடுவே வந்துள்ளது.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், யானையைக் கண்ட பேருந்து ஓட்டுநர் பேருந்தை பின் நகர்த்தி வந்தார். ஆனால், யானையோ எதற்கும் அஞ்சாமல் கண்ணாடியை தும்பிக்கையால் உடைத்தது.
பேருந்தில் இருந்த மக்கள் யானைக்கு பயந்து பின்னோக்கி நகர்ந்தனர். ஆனால் யானை சற்றும் சலிக்காமல் மீண்டும் பேருந்தில் இடித்தது. அதன்பின் ஓட்டுனர் ஓரமாக பேருந்தை நிறுத்திவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.
பின்னர், சிறிது நேரம் கழித்து யானை பேருந்துக்கு பின்புறமாக சென்றுள்ளது. ஆபத்தான நேரத்தில் பேருந்து ஓட்டுனர் யானையை பார்த்து பயப்படாமல் பேருந்து பயணிகளை பாதுகாத்த ஓட்டுனருக்கு பேருந்து பயணிகள் நன்றி தெரிவித்தனர்.