VIDEO: தம்பி... இப்போ 'என்ன' நடந்து போச்சுன்னு இப்படி 'தாம்தூம்'னு குதிக்குறீங்க...? 'மேட்ச்ல ஆக்ரோஷமான இளம் வீரர்...' - 'டிரெண்ட்' ஆகும் வைரல் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய (26-09-20021) போட்டியில் பெங்களூர் அணி வீரர் ஒரு சிக்ஸர் அடித்துவிட்டு உச்சக்கட்ட மகிழ்ச்சியில் துள்ளி குதித்த வீடியோ டிரென்டிங் ஆகி வருகிறது.

ஐபிஎல் டி-20 தொடரில் நேற்று இரு போட்டிகள் நடந்தன. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பலப்பரீட்சை நடத்தின. ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்திய இந்த ஆட்டத்தில் கடைசியில் ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணி திகில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. இருவருக்குமே வாழ்வா சாவா என்ற நிலையில் இந்த போட்டி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூர் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான தேவ்தட் படிக்கல் டக் அவுட்டாகி ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க வீரரான கேப்டன் கோலி நிதானமாக நின்று அடித்து 51 ரன்கள் குவித்தார்.
மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய இளம் சிங்கம் ஸ்ரீகர் பாரத் 31 ரன்கள் அடித்து வெளியேறினார். நான்காவது விக்கெட்டுக்கு களமிறங்கி மும்பை இந்தியன்ஸின் பந்துவீச்சை கதறவிட்ட கிளன் மேக்ஸ்வெல் 37 பந்துகளில் 56 ரன்கள் அடித்து மும்பை அணிக்கு மூச்சுத் திணறலை உருவாக்கினார்.
இதன்காரணமாக,பெங்களூர் அணி நேற்றைய போட்டியில் குறைந்தபட்சம் 190 ரன்களாவது குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் பெங்களூர் அணியோ வழக்கம் போல் கடைசி நேரத்தில் அடுத்தடுத்து விக்கெட்டையும் பறிகொடுத்த காரணத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழது 165 ரன்கள் எடுத்துள்ளது.
மும்பை அணியின் மாஸ்டர் பவுலர் ஜஸ்ப்ரிட் பும்ராஹ் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதே போல் ராகுல் சாஹர், டிரண்ட் பவுல்ட் மற்றும் ஆடம் மில்னே ஆளுக்கு ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
இந்தநிலையில், இந்த போட்டியில் பெங்களூர் அணியில் மூன்றாவது பேட்ஸ்மேனக களம் இறங்கிய ஸ்ரீகர் பாரத் ஒரு சிக்ஸர் விளாசிவிட்டு அதை அரைசதம் அடித்தது போல் உற்சாகத்தில் கொண்டாடியது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.
Bharat did this after hitting a six. So Chahar just gave it back. Nothing wrong pic.twitter.com/0HzpQpNiCq
— jd (@j_dhillon7) September 26, 2021

மற்ற செய்திகள்
