முதல்ல 'காசு' கொடு, அப்புறம் 'வண்டி' எடுக்கலாம்... டோல்கேட் சிசிடிவி, என அனைத்தையும்... அதிர்ச்சி வீடியோ...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Jan 26, 2020 12:46 PM

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் அரசு பேருந்து ஊழியர்களுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே நடந்த மோதலில் சிசிடிவி காமிராக்கள், இரு சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

Government bus, customs staff clash - looted goods in a rage

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்சி நோக்கி புறப்பட்ட அரசு விரைவு பேருந்து நேற்றிரவு செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியை கடந்து சென்றது. அப்போது அங்கிருந்த சுங்கச்சாவடி ஊழியர் அரசு பேருந்து ஓட்டுனரிடம் சுங்கக்கட்டணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் சுங்கச்சாவடி ஊழியருக்கும் பேருந்து ஓட்டுனருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி இருவரும் கைகலப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஓட்டுனர் பேருந்தை சுங்கச்சாவடியின் குறுக்கே பக்கவாட்டில் நிறுத்தியதால் வேறு வாகனங்கள் எதுவும் சுங்கச்சாவடியை கடந்து செல்ல முடியவில்லை.

இதன் காரணமாக அப்பகுதியில் 5 மணி நேரமாக போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் கடும் நெரிசல் காணப்பட்டது. இதற்கிடையில் நெரிசலில் சிக்கி தவித்த பேருந்துகளில் இருந்த பயணிகள் சிலர் கீழே இறங்கி ஆத்திரத்துடன் டோல்கேட் பூத்துகள், சிசிடிவி கேமராக்கள், ஊழியர்களின் இருசக்கர வாகனங்கள் என அங்கிருந்த அனைத்தையும் அடித்து நொறுக்கினர்.

தகவல் அறிந்து சென்ற போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போக்குவரத்து சீரானது. அரசு ஓட்டுனர் மற்றும் நடத்துனரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் வன்முறையில் ஈடுபட்ட சிலரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பரனூர் சுங்கச்சாவடியில் இதுபோன்ற அடிதடி சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவதாக அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் தெரிவித்தனர்.

Tags : #TOLLGATE