நட்புதான் சொத்து நமக்கு.. ஃபுட்பால் போட்டியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்"நண்பனில் ஏதும்மா நல்ல நண்பன் கெட்ட நண்பன் நட்புதான் எல்லாமே" என்று ராஜா ராணி படத்தில் சந்தானம் பேசும் வசனங்கள் நட்புக்குஎடுத்துக்காட்டாய் விளங்கும் அனைவருக்கும் பொருந்தும். குறிப்பாக துன்பம் வரும் காலத்திலும் நம்முடனே இருப்பவர் தான் உண்மையான நண்பர். அதேபோன்று ஒரு வீடியோ, தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
ரசிகர்கள் பட்டாளம்
சர்வதேச அளவில் கால்பந்து விளையாட்டு மிகவும் பிரபலமானது. கால்பந்துக்கு வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். தொலைக்காட்சி, செல்போன் போன்றவற்றில் போட்டிகள் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும்போது மிகுந்த ஆர்வத்துடனும், ஆரவாரத்துடனும் நாம் கண்டு ரசிப்போம். அதிலும், போட்டி நடைபெறும் மைதானத்துக்கு சென்று நேரில் கண்டால் கொண்டாட்டங்களுக்கு பஞ்சமே இருக்காது. தங்களுக்கு விருப்பமான அணி அல்லது வீரர்களின் வெற்றி மற்றும் தோல்வியை ஏற்க முடியாத ரசிகர்களும் இருப்பார்கள்.
கண் பார்வை இழந்த கர்லோஸ்
ஃபுட்பால் போட்டி நடைபெறும் மைதானம் ஒன்றுக்கு நேரில் செல்ல வாய்ப்பு கிடைத்தும் போகமுடியாமல் வீட்டில் முடங்கி கிடக்கும் பார்வையிழந்த ரசிகர்கள் பலர் இருக்கின்றனர். விளையாட்டு வீரர்களை நேரில் பார்த்தது கிடையாது, ஆனால் அவரது பெயர்களை தம் மனதில் ஆழமாய் பதிய வைத்து கொள்வார்கள். கிரிக்கெட் போட்டியை காண ஒரு நண்பன் இருந்தால் போதும் அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து விடும். அந்த வகையில் போட்டியை நேரில் காணமுடியாத துரதிர்ஷசாலியாக இருந்தவர் கர்லோஸ்.
நண்பன் சீசர்
பார்வை தெரியாது என்பதால் போட்டியை நேரில் காண முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், தனது உண்மையான நண்பன் சீசர் கூடவே இருந்ததால் அந்தக் கவலையும் தீர்ந்து போனது. கால்பந்து போட்டி மைதானத்தில் நடந்து கொண்டிருந்தன. போட்டியின் ஒரு பக்கம் மைதானம் போன்ற ஒரு அட்டையை டேபிளில் வைத்து, அதில் கர்லோசின் கைகளை பற்றி கொண்ட சீசர், பந்து எந்த திசையை நோக்கி உதைக்கப்படுகிறது, எந்த அணி முன்னேறிச் செல்கிறது என்பதை தெளிவாக விளக்கினார். பந்து நகரும் ஒவ்வொரு அசைவையும் சீசர் செய்து காட்டியதால் கால்பந்தை நேரில் பார்த்த உணர்வை பெற்றார் கர்லோஸ்.
மகிழ்ச்சியில் குதித்த கர்லோஸ்
அப்போது, தங்களுக்கு ஆதரவான அணி கோல் போட்டதை விவரித்தவுடன், மகிழ்ச்சியில் ஆர்பபரித்து எழுந்து கைதட்டினார். சீசரின் முயற்சியால் கர்லோஸின் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. தற்போது இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும், "இப்படி ஒரு நண்பர் வாழ்க்கை முழுவதும் கிடைக்க வேண்டும்" என குறிப்பிட்டனர். இதனை பதிவிட்ட ஒருவர், " நமக்கும் கூட சீசரை போன்ற நண்பர்கள் தேவைப்படுகிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவை காண்பவர் ஒவ்வொருவர் கண்களிலும் நீர் வழிந்து ஓடுகிறது. சீசரின் இந்த அற்புதமான முயற்சிக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.