VIDEO: உங்க 'கடமை' உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா...? எந்த நேரத்துல வந்து 'என்ன' பண்ணிட்டு இருக்கீங்க...? - டிரென்டிங் ஆகும் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருமண நாளில் கூட மணமேடையில் லேப்டாப்பை மடியில் வைத்துகொண்டிருக்கும் மணமகனின் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகிவருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் இந்த உலகத்திற்கு புதிய நடைமுறைகளை பயிற்றுவித்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும். ஒரு பக்கம் பள்ளி கல்லூரிகள் 2 வருடங்களாக மூடப்பட்டிருப்பதும், மறுபக்கம் வேலைக்கு செல்பவர்களுக்கு Work from home பரிதாபங்களும் தொடர்ந்து நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது.
இதை பறைசாற்றும் விதமாக இன்ஸ்டாகிராமில் ஒரு திருமண மண்டபத்தில் நடக்கும் வீடியோவும் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிராவில் நடந்த ஒரு திருமணத்தின் போது எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவில் மணமகன் ஒருவர் மணமேடையில் எல்லோரும் சுற்றி நின்று நலங்கு வைக்கும் போது அவர் மட்டும் லேப்டாப்பில் அலுவலக வேலையை செய்து கொண்டிருக்கிறார்.
மணமகளின் நண்பர் ஒருவர் அவரையும், வருங்கால கணவரின் செயலை பார்த்து மணமகள் சிரிப்பதை வீடியோவாக எடுத்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி கமெண்ட் பதிவிடும் பலரும், 'உங்கள் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவு இல்லையா' என நகைச்சுவையாக பதிவிட்டுவருகின்றனர்.

மற்ற செய்திகள்
