‘INSTAGRAM-ல் இருந்த பெரிய மிஸ்டேக்’!.. இன்ஜீனியரிங் மாணவருக்கு அடிச்ச ஜாக்பாட்.. FACEBOOK நிறுவனம் அசத்தல் அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்இன்ஸ்டாகிராமில் உள்ள பிழையை சுட்டிக்காட்டியதற்காக பொறியியல் மாணவர் ஒருவருக்கு பேஸ்புக் நிறுவனம் ரூ.22 லட்சம் பரிசு கொடுத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சோலாபூரைச் சேர்ந்தவர் கணிப்பொறியியல் மாணவர் மயூர். இவர் கணினி மொழிகளான சி++ மற்றும் பைதானில் திறன் பெற்றுள்ளார். இந்நிலையில் பேஸ்புக் தங்கள் தளங்களில் இருக்கும் பிழைகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசுத்தொகை அறிவித்திருந்தது. அதில் மாணவர் மயூரும் கலந்து கொண்டார்.
அப்போது இன்ஸ்டாகிராமில் பிரைவட் கணக்கு வைத்திருந்தாலும் கூட அதிலுள்ள ஒரு பிழை, யாரை வேண்டுமானாலும் தவறாக நுழைய அனுமதித்து பயனர்களின் புகைப்படங்கள், ஸ்டோரீஸ் ஆகியவற்றை பார்க்க முடிகிறது என கண்டுபிடித்தார். இதனை கடந்த மாதம் ஏப்ரல் 16-ம் தேதி பேஸ்புக்கிற்கு மயூர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதனை அடுத்த சில நாட்களில் மயூருக்கு பதிலளித்த பேஸ்புக் நிறுவனம், இதுகுறித்த கூடுதல் தகவல்களைக் கேட்டது. மயூரும் அதுதொடர்பான தொழில்நுட்ப ரீதியான தகவல்களை அனுப்பினார். இந்த பிழையை ஜூன் 15-ம் தேதி பேஸ்புக் சரி செய்தது.
இதனை அடுத்து மாணவர் மயூருக்கு 30 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.22 லட்சம்) பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது. எதிர்காலத்திலும் இதுபோன்று நிறைய அறிக்கைகளை தங்களிடம் எதிர்பார்க்கிறோம் என மயூரிடம் பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.