'யோவ், சத்தியமா சொல்றேன் உன் மனசு யாருக்குமே வராது'... 'இப்படி ஒரு ஈகோ இல்லாத மனுஷனா'?... தலைவர் வேற லெவல் சம்பவம் பண்ணி இருக்காரு!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதனது நெகிழ்ச்சியான செயலால் தனக்கு ஈகோ என்பதே கிடையாது என நிரூபித்து ரசிகர்களின் அன்பை சம்பாதித்துள்ளார் டேவிட் வார்னர்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. தொடர் தோல்விகளால் துவண்டு இருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இந்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெறும் என ரசிகர்கள் நம்பியிருந்த நிலையில் வெற்றி பெற்று தனது தொடர் தோல்விக்கு முற்றுப் புள்ளி வைத்தது.
இந்நிலையில் ஹைதராபாத் அணியில் டேவிட் வார்னருக்கு பதிலாக, ஜேசன் ராய் களமிறக்கப்பட்டார். இந்த ஐபிஎல் தொடரில் அவருக்கு இது முதல் போட்டி என்பதால் அவர் எப்படி விளையாடுவார் என்பது குறித்த எதிர்பார்ப்பு பரவலாக நிலவியது. ஆனால் ஜேசன் ராய் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் தனது அதிரடி ஆட்டத்தால் அரை சதம் அடித்து, 60 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ஜேசன் ராய் எடுத்த ரன்கள் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு பெரும் உதவியாக இருந்தது. இந்நிலையில் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமான அவரின் புகைப்படத்தைப் பதிவிட்டு, டேவிட் வார்னர் சூப்பர் என்று பாராட்டி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஜேசன் ராய் தனக்குப் பதிலாகக் களமிறக்கப்பட்ட வீரர் என்பது குறித்த ஈகோ சிறிதும் இல்லாமல் டேவிட் வார்னர் செய்த செயல் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.
டேவிட் வார்னர் கிரிக்கெட்டைத் தாண்டி தனக்குப் பெரிய மனது இருக்கிறது என்பதை அவ்வப்போது நிரூபித்து வருகிறார் என ரசிகர்கள் பலரும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகிறார்கள்.

மற்ற செய்திகள்
