மணமேடையிலேயே அசந்து தூங்கிய மணமகள்... மாப்பிள்ளை சார் என்ன பன்றார் பாருங்க... வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅண்மையில் நடந்த திருமண நிகழ்வில் மணமேடையிலேயே மணமகள் தூங்கி வழிந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

திருமணம் என்பது ஒவ்வொருத்தரின் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும். தனது வாழ்நாள் துணையை கரம்பிடிக்கும் மகிழ்ச்சியான நாளில், பல மறக்க முடியாத நினைவுகளும் இடம்பெறும். திருமணம் ஒவ்வொரு சமூகத்திலும் பல்வேறு கலாசார பண்பாடுகளை பின்பற்றுவார்கள். திருமண சடங்ககுள் விழா கோலம் போல் காட்சியளிக்கும்.
ஒரு சில மக்களிடம் வித்தியாசமான முறையில் திருமணத்தை நடத்துவார்கள். சிலர் 10 நாட்கள் வரை திருமணம் செய்வார்கள். அவரவர் பழக்க வழக்கத்தை பொறுத்து திருமணம் நடைபெறும் . இப்படியாக சமீபத்தில் வட இந்தியாவில் விடிய விடிய நடந்த திருமணத்தில், மணப்பெண் தொடர் கண்விழிப்பு காரணமாக பாதிக்கப்பட்டு, மணமேடையில் மெய்மறந்து உறங்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
அந்த வீடியோவில் மணமகனுக்கு பணமாலை அணிவித்து புகைப்படம் எடுக்கும் நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. அப்பொழுது அருகில் சிவப்பு மற்றும் ஆரஞ்ச் நிற லெஹங்கா ஆடையில் முழு மணப்பெண் அலங்காரத்திலிருந்த மணப்பெண் சோபாவில் அமர்ந்தபடியே தூங்கி விழுகிறார். சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.
இந்த வீடியோ எடுத்த நபரை பற்றி தெரியவில்லை, இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் பல வித கமெண்டுகளை தெரிவித்துகின்றனர். ஒரு சிலர் மணப்பெண்ணுக்கு பரிந்து பாவம் தூக்க கலக்கம், என்றும் திருமணம் நடந்தாலும் தூக்கத்தை விட முடியாது. திருமணத்தை சீக்கிரம் நடத்துங்கப்பா பாவம் பிள்ளைக்கு தூக்கம் வருது என்றும் கமான்ட் செய்து வருகின்றனர்.
திருமணங்கள் என்றாலே முதல் நாள் நண்பர்களை சந்திப்பது, போட்டோ சூட் என மணமக்கள் பிசியாக இருந்திருப்பார்கள். மறுநாள் அதிகாலை எழுந்துகொள்ளும் சூழல் இருப்பதால், இப்படியான அசதி உறக்கம் நிகழ்ந்து இருக்கலாம் என நெட்டிசன்கள் கருத்துகள் தெரிவிக்கின்றனர்.

மற்ற செய்திகள்
