ப்ரீத்தி ஜிந்தாவுக்கு தம்பியான யுவராஜ்.. 47 வயதில் மாறாத அதே பண்பு.. ப்ரீத்திக்கு சர்ப்ரைஸ் தந்த யுவி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு1988ம் ஆண்டு வெளியான 'தில் சே' படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானவர் ப்ரீத்தி ஜிந்தா. உயிரே படத்தில் நெஞ்சினிலே நெஞ்சினிலே பாட்டிற்கு ப்ரீத்தி ஜிந்தாவின் நடனத்தை பார்த்து மனதை பறிகொடுத்தவர்கள் பலர். 90'ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். தெலுங்கு, பஞ்சாபி மற்றும் ஆங்கில மொழி படங்களில் நடித்து பரீட்சையமானார். பின்பு ஐபிஎல் உள்ள எட்டு அணிகளில் பஞ்சாப் அணியின் நிர்வாகியாகவும் திகழ்கிறார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் குயின் என்றே அழைக்கப்பட்டவர் ப்ரீத்தி ஜிந்தா வெற்றி தோல்வியை தோழமையுடன் தனது அணியினருடன் பகிர்ந்து கொண்டார். இந்நிலையில், இன்று தனது 47வது பிறந்தநாளை அவர் கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாளுக்கு திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் வாழ்த்து தெரிவித்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
முதல் ஐபிஎல் போட்டியின் போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக யுவராஜ் சிங் விளையாடினார். அப்போது, அந்த அணி அரையிறுதி வரை சென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது. இதனிடையே, போட்டியின் போது ப்ரீத்தி ஜிந்தாவுடன் யுவராஜ் சிங் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தற்போது இந்தப் புகைப்படத்தை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும், ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெறும்போதும் கிரிக்கெட் வீரர்களை கட்டிபிடிக்கும் ப்ரீத்தி ஜீந்தா, யுவராஜை கட்டி பிடிக்கும் புகைப்படம் வைரல் ஆனது. இதனைக் கண்டு பலரும் இருவரும் காதலிப்பதாகவும், டேட்டிங்கில் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, 'கட்டிப்பிடிப்பதை ரசிகர்கள் யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். கிங்ஸ் லெவன் டீம் என் குடும்பம் மாதிரி. அதில் யுவராஜ் சிங் எனது தம்பி மாதிரி' என்று பரீத்தி தெரிவித்து எல்லோருடைய பேச்சுக்கும் முடிவை தந்தார்.
நெஸ் வாடியா என்பவருக்கும் பிரீத்தி ஜிந்தாவுக்கும் இடையே காதல் மலர்ந்து, பின்னர் இருவருக்குள்ளும் ஏற்பட்ட சில கருது வேறுபாடுகள் காரணமாக அவர்கள் இருவரும் பிரிந்தனர். அதனையடுத்து அமெரிக்காவை சேர்ந்த ஜீன் குட் இனஃப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த நவம்பர் மாதம் ப்ரீத்தி ஜிந்தா - ஜீன் குட் இனஃப் தம்பதிக்கு இரட்டை குழந்தையை வாடகை தாய் மூலம் பெற்றெடுத்தனர். தற்போது கணவருடன் லாஸ் ஏஞ்சல்சில் ப்ரீத்தி ஜிந்தா வசித்து வருகிறார். அதேபோன்று கடந்த 26ம் தேதி யுவராஜ் சிங் மற்றும் மனைவி ஹேசல் கீச் தம்பதியினருக்கு ஆண்குழந்தை பிறந்தது. கடவுளுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
