ஆணுறை யூஸ் பண்றது ரொம்ப கம்மி ஆயிடுச்சு.. விற்பனை கடும் வீழ்ச்சி.. ஆய்வு முடிவில் வெளிவந்த தகவல்

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Feb 05, 2022 12:07 PM

கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் அதிகமாக ஆணுறைகளை உபயோகப்படுத்துவது இல்லை என்ற ஆய்வு தற்போது வெளியாகியுள்ளது.

Nikkei Asia report use condoms decreased during pandemic

ஆஹா.. வேறமாறி மாறிப்போகும் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை.. செம்ம நியூஸ்

ஆசியாவில் மிகப்பெரிய ஊடகங்களுள் ஒன்றான நிக்கெய் ஆணுறைகளைப் பயன்படுத்துவது குறைந்துள்ளதாக ஆச்சரியம் அளிக்கும் வகையில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா காலத்தில் அனைவரும் வீட்டில் இருக்கும் நிலையில் ஆணுறைகள் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்ற மீம் எல்லாம் உருவானது.

ஆணுறை பயன்பாடு வீழ்ச்சி:

ஆனால், உண்மை என்னவென்றால் கொரோனா தொற்று உலகின் மிகப்பெரிய ஆணுறை தயாரிப்பு நிறுவனத்திலும் பாதிப்புகளை உருவாக்கியுள்ளது. சென்ற வருடத்தில் மட்டும் ஆணுறை பயன்பாடு குறைந்து விற்பனை சுமார் 40 சதவிகிதம் வீழ்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தியினை, உலகின் மிகப்பெரிய ஆணுறை தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான கேடக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோ மியா கைத் கூறியுள்ளார்.

Nikkei Asia report use condoms decreased during pandemic

தாய்லாந்தில் உற்பத்தி தொழிற்சாலை :

இதுகுறித்து பேசிய அவர், 'ஆணுறை பயன்பாடு குறைந்ததற்குக் கொரோனா பெருந்தொற்று காலத்தில் பாலியல் நலனுக்கான மையங்களும் மூடப்பட்டிருந்தது காரணம் என நினைக்கிறன்'  எனக் கூறியுள்ளார். மேலும், மலேசியாவைச் சேர்ந்த கேடக்ஸ் நிறுவனம் தற்போது மருத்துவ கையுறைகள் தயாரிப்பு வர்த்தகத்தில் லாபம் பெருகியிருப்பதைக் குறிப்பிட்டு, தற்போது கையுறை தயாரிப்புக்காக தாய்லாந்தில் உற்பத்தி தொழிற்சாலை தொடங்கப்படும் எனக் கூறியுள்ளார்.

நிக்கெய் அறிக்கை:

இந்த கேடக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஆணுறைகளை உலகம் முழுவதும் மக்கள் பயன்படுத்தப்படும் 5 ஆணுறைகளுள் ஒன்று என்ற விகிதத்தில் இருக்கும். சுமார் 140 நாடுகளுக்கு ஆணுறைகளை ஏற்றுமதி செய்யும் இந்த நிறுவனம் `டியூரெக்ஸ்’ என்ற பெயரில் ஆணுறைகளை விற்பனை செய்கிறது.  ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக, கேடக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 18 சதவிகிதம் என்ற அளவில் குறைந்துள்ளன. மேலும், இதே காலகட்டத்தில் மலேசியாவின் பங்குச் சந்தையும் சுமார் 3.1 சதவிகிதம் என்ற அளவில் வீழ்ந்துள்ளதாக நிக்கெய் அறிக்கையில் சமர்ப்பித்துள்ளது.

மேலும், சமீபத்திய ஆய்வு ஒன்றின் முடிவுகளில், உலகம் முழுவதும் பதின்வயது ஆண் மற்றும் பெண் குழந்தைகள் ஆணுறைகளை பயன்படுத்தினால் சுமார் 6 மில்லியன் தேவையற்ற பிரசவங்களும், ஆபத்தான முறையில் செய்யப்படும் 2 மில்லியன் கருக்கலைப்புகளும் ஒவ்வொரு ஆண்டும் தவிர்க்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த கோலத்துலையாமா நான் உன்ன பாப்பேன்.. கதறி துடித்த தந்தை.. நீளமான முடியால் வந்த ஆபத்து

Tags : #NIKKEI ASIA #CONDOM #PANDEMIC #கொரோனா #ஆணுறை #நிக்கெய் அறிக்கை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Nikkei Asia report use condoms decreased during pandemic | World News.