VIDEO: கோலி - அனுஷ்கா முன்னெடுத்த FUN சேலஞ்ச்!.. கலைகட்டிய இணையம்!.. ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா அறிமுகம் செய்துள்ள வீடியோ சேலஞ்ச் வைரலாகி வருகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது இந்திய அணி. இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இந்த போட்டி வரும் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் செப்டம்பர் 14ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கு இன்னும் 5 வார காலம் உள்ளதால் பயிற்சிக்கு முன்னதாக இந்திய வீரர்கள் தற்போது மனைவிகளுடன் இங்கிலாந்தை சுற்றி வருகின்றனர்.
அந்த வகையில், இந்திய அணி கேப்டன் விராட் கோலியுடன், அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா மற்றும் குழந்தை ஆகியோரும் இங்கிலாந்து சென்றுள்ளனர். அவர்கள் இங்கிலாந்தில் உள்ள முக்கிய இடங்களை சென்று பார்வையிட்டு வருகின்றனர். இந்தியாவில் தங்களது மகளை பலரும் புகைப்படம் எடுப்பார்கள் என்பதால் வெளியில் குழந்தையை எடுத்துச்செல்லாமல் இருந்த கோலி - அனுஷ்கா ஜோடி, இங்கிலாந்தில் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இவர்கள் தற்போது ரசிகர்களுக்கான புதிய வீடியோ சேலஞ்ச் ஒன்றை தொடங்கியுள்ளனர். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ள வீடியோவில், கோலி மற்றும் அனுஷ்கா இருவரும் கிரிக்கெட் பேட்டினை தனது கை விரலில் நிற்கவைத்து இரு புறமும் பேலன்ஸ் செய்துள்ளனர். இந்த சேலஞ்சை ரசிகர்களும் மேற்கொள்ள வேண்டும் என கேப்ஷனில் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தின் விளம்பரத்திற்காக இந்த சேலஞ்சை மேற்கொண்டுள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பேட் சேலஞ்சினை செய்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இதற்கு முன்னர் பல்வேறு சேலஞ்ச் வீடியோக்கள் ட்ரெண்டான நிலையில் தற்போது பேட் சேலஞ்சும் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
