இனிமேல் யாராச்சும் 'தாலிபான்களுக்கு' சப்போர்ட் பண்ணி 'போஸ்ட்' போடுவீங்க...? 'என்ன ஏதுன்னு கேட்டுட்டு இருக்க மாட்டோம்...' - ஃபேஸ்புக் நிறுவனம் அதிரடி...!
முகப்பு > செய்திகள் > உலகம்தாலிபான்கள் ஆப்கானை கைப்பற்றிய சம்பவம் கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் பேசுபொருளாக இருக்கிறது.
இந்நிலையில் தீவிரவாதத்தை அடிப்படை தன்மையாகக் கொண்ட இந்த தாலிபான்கள் குறித்து பலர் சமூகவலைத்தளமான ட்விட்டரிலும், முகநூலிலும் பதிவிட்டு வருகின்றனர்.
வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் சிலர் தாலிபான்களுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால் ஃபேஸ்புக் நிறுவனமோ தாலிபான் ஒரு தீவிரவாத அமைப்பு, அதுகுறித்து ஆதரவாக கருத்து தெரிவிப்பரின் கணக்கு முடக்கப்படும் என அறிவித்தது.
அமெரிக்க சட்டப்படி பயங்கரவாத அமைப்பாக தலிபான் வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், எங்கள் நிறுவனத்தின் கொள்கைப்படி தாலிபான்களின் கணக்குகளுக்கு தடை விதிக்கப்படுவதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதுபோலவே பலரின் போஸ்ட்களும், அவர்களின் முகநூல் கணக்குகளும், முடக்கப்பட்டன. இந்நிலையில் முகநூல் மட்டுமல்லாது, தாலிபான்களுக்கு ஆதரவாக செயல்படுவோரின் வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவைகளும் முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.