'ண்ணோவ், என்ன உட்ருணா'... 'நேத்து நடந்த சம்பவத்துக்கும் எனக்கும் சம்மந்தம் இல்ல'... 'ஒருபுறம் CUSTOMER CARE'... மறுபக்கம் ட்விட்டரில் கதறவிட்ட நெட்டிசன்கள்!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்நேற்றிரவு முதல் முடங்கியிருந்த பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்க்கு ஏர்டெல் தான் காரணம் என நினைத்த நெட்டிசன்கள் மீம்ஸ்களை பறக்க விட்டார்கள்.
பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் தளங்களை உலகெங்கும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். நேற்றிரவு இவற்றின் சேவைகள் திடீரென முடங்கின. இந்திய நேரப்படி இரவு 9.30 மணியளவிலிருந்து உலகம் முழுவதும் இச்சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அவதியடைந்தனர்.
இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் உடனடியாக விளக்கம் அளித்திருந்த பேஸ்புக் நிறுவனம், தடங்கலுக்கு வருந்துவதாகவும், இந்த தொழில் நுட்பக் கோளாறு சரி செய்யப்படும் எனக் கூறியிருந்தது. இந்த நிலையில் 6 மணி நேரத்திற்குப் பிறகு காலை சுமார் 4 மணி அளவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் வலைத்தளங்கள் அடுத்தடுத்து செயல்பாட்டுக்கு வரத்தொடங்கின. ஆனால் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் சேவைகள் எதனால் முடங்கியது என்பது குறித்து அந்நிறுவனம் எந்த தகவலையும் வெளியிடவில்லை.
“ஏம்ப்பா அத்தனை பேரும் fb, வாட்ஸப் வொர்க் ஆகலன்னு பைத்தியம் மாதிரி ட்விட்டர்ல பொலம்பிகிட்டு இருந்தாங்க.. ஆனா நீ மட்டும் ரொம்ப coolஆ இருந்தியே..எப்படி”
— CSK மருகுபாண்டி (@marugupandi) October 5, 2021
“AIRTEL யூசருங்க நானு” -// pic.twitter.com/Xx9wo0mYSA
இந்நிலையில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் முடங்கிய நிலையில், ஏர்டெல் பயனாளர்கள் பலரும் ஏர்டெல் நெட்ஒர்க்கில் தான் ஏதோ பிரச்சனை என நினைத்து அந்நிறுவனத்தைத் திட்டி தீர்த்தார்கள். இது தொடர்பாக ட்விட்டரில் பல மீம்ஸ்கள் பறந்தது. பலரும் Flight mode போட்டுப் பார்த்து, மறுபடியும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் இயங்குகிறதா என்று சோதித்துப் பார்த்துள்ளார்கள்.
இதற்கிடையே பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் முடங்கியதற்கு நாங்கள் என்ன செய்வோம், இதற்கும் எங்களை விட்டு வைக்கமாட்டீர்களா என்ற ரீதியில் ஏர்டெல் நிறுவனம் பலருக்கும் பதிலடி கொடுத்து வருகிறது.
பேஸ்புக், வாட்சப் சர்வர் டவுணாம்.. இது தெரியாம ஏர்டெல்ல திட்டிகிட்டே 3வாட்டி Flight mode on பண்ணி பாத்தேன்.. pic.twitter.com/tL3FdwH6wO
— James Stanly (@JamesStanly) October 4, 2021
#WhatsApp downஆ...
— Dinesh Udhay (@Me_dineshudhay) October 5, 2021
சாரி டா நான் உங்கள (ஜியோ, ஏர்டெல்) லாம் தப்பா நெனச்சுட்டேன்...
🤣🤣🤣🤣🤣 pic.twitter.com/iUXzpxKhsh
Airtel customer care service ..🎧☎@airtelindia @Airtel_Presence
— ஜெகதீஷ்.கோ (@Jaisajoints) October 5, 2021
ண்ணோவ்.. என்ன உட்ருணா..!! Fb server downக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லண்ணா.. pic.twitter.com/kNm9zkmdWJ
அய்ய்... நிறைய பேர்க்கு வாட்சப் ஸ்டேட்டஸ் ஒர்க் ஆகலியா...💃💃
— நட்சத்திரா (@star_nakshatra) October 4, 2021
நா கூட நெட் சரியில்லயோனு ஏர்டெல் மாமாவ திட்டிட்டேன் 😥😒😒
Airtel - நெட் slow வா இருந்தா கூட பரவாயில்ல யுவர் ஆனார்.. இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஒர்க் ஆகலனா கூட என்னைய சந்தேக படுறானுங்க யுவர் ஆனார்.. pic.twitter.com/1YEj3ZKhpK
— கடைநிலை ஊழியன் (@Suyanalavaathi) October 4, 2021
ஏர்டெல் அட்மின் கூட வம்பு பண்ணி எல்லாரும் பிரபலம் ஆகுறாங்களே..? நாம யாரு வம்பு தும்புக்கும் போறது இல்ல கஷ்டம் தான் பிரபலமாகுறது..!! 😟😕
— 🍁 அசோக் 🕊️ (@Ashok___04) October 3, 2021
James Stanly அவர்களே, நீங்கள் ட்விட்டரைத் திறந்து பார்த்தீர்களா ?
— Airtel Cares (@Airtel_Presence) October 5, 2021