சாப்பிடும்போதே EXCERSISE-ஆ... இது என்னடா புது உருட்டு!- MCDONALD'S வைரல் ஐடியா
முகப்பு > செய்திகள் > உலகம்இன்றைய இளைஞர்கள் பலர் உணவே மருந்து என்னும் தத்துவத்தைப் ஃபாலோ செய்யத் தொடங்கி இருக்கின்றனர். குறிப்பாக கொரோனாவுக்குப் பின்னர் பலரும் வீட்டில் இருந்தபடியே வேலை செய்வதால் எடை அதிகரிப்பைத் தவிர்ப்பதற்கு உட்கொள்ளும் உணவு குறித்து அதிக கவனம் எடுத்துக் கொள்கிறார்கள்.
அதே நேரத்தில் இன்றைய காலக்கட்டத்தில் ஸ்டிரெஸ் அதிகமானதால், வெளியில் இருந்து துரித உணவுகளை ஆர்டர் செய்து ஒரு கை பார்க்கும் பிரிவினரும் இருக்கிறார்கள். அவர்களின் அதிகம் சாப்பிடுகிறோமே என்கிற குற்ற உணர்வைப் போக்குவதற்கு பர்கர் போன்ற துரித உணவுகளில் மிகவும் பிரபலமான பிராண்ட் ஆக இருக்கும் மெக்டொனால்டுஸ் புதிய முயற்சியை மேற்கொண்டு உள்ளது.
சமீபத்தில் ஒரு டிக் டாக் வீடியோ உலக அளவில் படுவைரலாக மாறியது. அந்த வீடியோவில் மெக்டொனால்டுஸ் உணவகம் ஒன்றில் சாப்பிடும் பெண், பர்கர் மற்றும் மில்க் ஷேக்கை ரசித்து ருசித்துச் சாப்பிடுகிறார். அதே நேரத்தில் அவர் சைக்கிளின் பெடல் போல அமைந்துள்ள ஒரு சேர் - டேபிள் செட்டப்பில் அமர்ந்தபடி அனைத்தையும் செய்கிறார்.
அந்தப் பெண், பெடலை அழுத்தியபடியே உணவைச் சாப்பிடுகிறார். இதன் மூலம் நாக்கின் சுவை நரம்புகளுக்கும் திருப்தி கிடைக்கும் அதே நேரத்தில் உடலுக்கு அத்தியாவசியமான உடற்பயிற்சியும் கிடைத்து விடுகிறது. இந்தப் பெண்ணைப் போலவே அவர் அருகிலேயே அமர்ந்திருக்கும் இன்னொரு ஆண், அப்படியே செய்கிறார்.
இதை வைத்துப் பார்க்கும் போது, அந்த உணவகத்தில் இதைப் போன்ற டேபிள்கள் அதிகம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இந்த வீடியோவானது சீனாவில் எடுக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. பலரும் இதை மிகவும் வித்தியாசமான அதே நேரத்தில் நல்ல ஐடியா என்று பாராட்டி வருகின்றனர்.
என்ன தான் இந்த மாதிரியான ஒரு செட்-அப் மக்களின் கவனத்தைப் பெற்றாலும், சாப்பிடும் போதே இப்படி உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது தானா என்கிற கேள்வியும் பலரது மனங்களிலும் எழுந்து சமுக வலைதளங்களில் கேள்விகளாக வெளிப்பட்டு வருகிறது.